ஆர்வ கோளாறில் நடிகை சான்வே மேகனா செய்த செயல்!! கலாய்த்த பிரபு தேவா...
ரீசார்ஜ் 2026
சென்னையிலுள்ள ராஜலட்சுமி பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற ரீசார்ஜ் 2026 கலாச்சார விழா, இந்திய கல்லூரி நிகழ்வுகளின் வரலாற்றில் புதிய மைல்கல்லை பதித்துள்ளது. இவ்விழாவின் முதல் நாளில் 18 ஆயிரம் பேருக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு சாதனை படைத்தனர்.
உலகப்புகழ்பெற்ற இசை மேதை ஏ ஆர் ரஹ்மான், முதன்முறையாக கல்லூரி வளாகத்தில் நேரடி இசை நிகழ்ச்சி வழங்கியது விழாவின் முக்கிய அம்சமாக திகழ்ந்தது.

அவருடன் ஸ்வேதா மோகன், ரக்ஷிதா சுரேஷ், அம்ருதா, சுரேஷ், நகுல் அப்யங்கர், ஹரிச்சரண் உள்ளிட்ட பல பாடகர்கள் கலந்து கொண்டு பாடலை பாடி பலரையும் உற்சாகப்படுத்தினார்கள்.
சான்வே மேகனா
இதனைதொடர்ந்து 2வது நாள் நிகழ்ச்சியில் நடன ஐகான் பிரபு தேவா நிகழ்ச்சி நடந்தது. அவருடன் இணைந்து நடிகைகள் சான்வே மேகனா, சாயிஷா, நிக்கி கல்ராணி, ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பல நடிகைகள் கலந்து கொண்டனர்.
பிரபு தேவாவுடன் நடிகைகள் ஆட்டம் போட்ட வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வரும் நிலையில், சான்வே மேகனாவை ஆர்வ கோளாறு என்று பிரபுதேவா கலாய்த்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
ஆர்வ கோளாறில் சாண்வி செய்த செயல் 😁😝😂 pic.twitter.com/KC1R9w7qbR
— Anshitha🫶💖🍉 (@Anshithaprincey) March 29, 2026