கல்யாணம் பண்ண 2 வருஷம் யோசித்தேன்!! ரெடின் கிங்ஸ்லி மனைவி சங்கீதா கூறிய ரகசியம்..
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக திகழ்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருபவர் நடிகர் ரெடின் கிங்ஸ்லி. கோலமாவு கோகிலா, டாக்டர், அண்ணாத்த, பீஸ்ட், பத்து தல, ருத்ரன், ஜெய்லர், மார்க் ஆண்டனி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது கங்குவா படத்தில் முக்கிய ரோலிலும் நடித்து வரும் ரெடின் கிங்ஸ்லி தன்னுடைய 46 வயதில் சீரியல் நடிகை சங்கீதாவை கடந்த ஆண்டு திருமணம் செய்து ஷாக் கொடுத்தார்.
இருவரும் திருமணத்திற்கு பின் ரொமான்ஸ் செய்தபடி எடுத்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள். சமீபத்தில் கடை விளம்பர பேட்டியில் கலந்து கொண்டுள்ள ரெடின் கிங்ஸ்லியை எப்படி காதலித்து திருமணம் செய்து கொண்ட ரகசியத்தை கூறியிருக்கிறார்.
திருமணத்திற்கு பின் தான் நான் குடும்பஸ்திரியாக மாறி சமையல் எல்லாம் கத்துக்கொண்டு வருகிறேன். காதலிப்பதாக அவர் தான் முதலில் கூறினார். நம்ம ஆளுக்கெல்லாம் ரொமாண்டிக் எல்லாம் கம்மி தான், போன் பண்ணி தான் காதலை சொன்னார்.
எந்த சர்ப்ரைஸும் பண்ணவில்லை, ஓகே சொல்லலாமா வேண்டாமா என்று யோசிக்க நேரம் எடுத்துக்கொண்டேன். 2 ஆண்டுகள் ஓகே சொல்ல காத்திருக்க வைத்தேன். அவரும் 2 வருஷம் காத்திருந்தார். கருப்பு பர்தா தான் எனக்கு முதலில் வாங்கி கொடுத்தார் என்று கூறியிருக்கிறார் நடிகை சங்கீதா.