ரெடின் கிங்ஸ்லி மனைவி சங்கீதாவா இது!! கர்ப்பத்துக்கு முன் எடுத்த அழகிய புகைப்படம்
ரெடின் கிங்ஸ்லி மனைவி சங்கீதா
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆனந்த ராகம் மற்றும் கனா காணும் காலங்கள் ஆகிய தொடர்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் சங்கீதா.
சீரியல்களை தாண்டி படங்களிலும் நடித்து பிரபலமான இவர், 47 வயதான பிரபல காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
திடீரென இவர்களின் திருமணம் நடக்கவே ரசிகர்கள் அனைவருமே இவர்கள் காதலித்தார்களா என ஷாக் ஆகினர். திருமணத்திற்கு பின் சங்கீதா தான் கமிட்டாகி இருந்த தொடர்களில் இருந்து விலகியிருந்தார்.
இதனையடுத்து கர்ப்பமான சங்கீதாவுக்கு பெண் குழந்தை சில மாதங்களுக்கு முன் பிறந்தது. அப்பாவான ரெடின் தன் மகளை கையில் ஏந்தியபடி எடுத்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில் குழந்தை பெற்றெடுத்த நடிகை சங்கீதா, சேலையில் மயக்கும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.