அது என் குழந்தை இல்லை.. பணத்துக்காக கல்யாணம் பண்ணேன்!! வருத்தப்படும் ரெடின் கிங்ஸ்லி மனைவி..
சின்னத்திரை சீரியல் நடிகையாக இருந்து கடந்த ஆண்டு காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை சங்கீதா. இரு ஆண்டுகளாக காத்திருந்த சங்கீதா கடந்த ஆண்டு சாதாரண முறையில் மைசூரில் ரெடின் கிங்ஸ்லியை மணந்தார். 46 வயதில் நடிகையை கரம்பிடித்த ரெடின் கிங்ஸ்லியை பலர் இணையத்தில் விமர்சித்து வந்த நிலையில், அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் இருவரும் ரொமான்ஸ் செய்து இணையத்தில் புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்ந்து வந்துள்ளனர்.
இணையத்தில் ஆக்டிவாக இருந்து சில பதிவுகளை பகிர்ந்து வரும் நடிகை சங்கீதா, சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், வதந்தி செய்திகள் குறித்து தன் மனநிலையை எப்படி இருக்கும் என்று பகிர்ந்துள்ளார். எனக்கு ஏற்கனவே குழந்தை இருக்குன்னு செய்திகள் போட்டார்கள். அது என் சகோதரரின் மகள் தான். அதை இன்று வரை சொல்லிகிட்டே இருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் அப்படியே நினைத்துக்கொள்ளுங்கள் என்று விட்டுவிட்டேன்.
குறிப்பிட்ட வயதுக்கு மேல் திருமணம் செய்து கொள்ள, சினிமாத்துறையில் இருப்பவர்களுக்கு கொஞ்சம் கஷ்டம் தான். ரெடின் கொஞ்சம் விட்டுக்கொடுத்து போகும் குணம் கொண்டவர் என்பதால் அட்ஜெஸ்ட் பண்ணி போய்விடுவார். நான் பண்ணுவது சிலவற்றை ஏற்றுக்கொள்வதில்லை, எனக்காக அதை பொறுத்துக் கொள்கிறார். பல கருத்துக்கள் வருகிறது.
லேட் மேரேஜ், இந்த வயசுல கல்யாணம் தேவையா என்று வயது குறித்து தான் பல கமெண்ட்ஸ்கள் வரும். இங்க இருக்கும் மக்களால் இதை புரிந்துக்கொள்ள முடியாது என்பதால் வெளிநாட்டுக்கு சென்று செட்டில் ஆகிவிடலாம் என்று தோன்றும். நாங்கள் எங்களை இளமையுடன் தான் இருக்கிறோம் என்று நினைத்துக்கொள்ளுவோம்.
பணத்துக்காக ரெடின் கல்யாணம் பண்ணேன்னு சொல்லும் போது, நானும் ஒன்னும் இல்லாமல் வந்தவள் இல்லை. இதற்கு எல்லாம் விளக்கமே கொடுத்துட்டு இருக்க முடியாது. அவரின் அரவணைப்பு குணம் தான் என்னை கவர்ந்ததே தவிர பணம் எல்லாம் இல்லை என்று சங்கீதா பகிர்ந்துள்ளார்.
You May Like This Video