46 வயதில் விஜய் பட நடிகையுடன் திருமணம்!! ரெடின் கிங்ஸ்லியின் திடீர் முடிவுக்கு இதான் காரணம்..
கடந்த 2018 -ம் ஆண்டு நெல்சன் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா படத்தின் மூலம் பெரிய அளவில் பிரபலம் ஆனவர் நடிகர் ரெடின் கிங்ஸ்லி. அவர் பேசும் விதத்திற்கே பெரிய அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். ரெடின் அதற்கு பிறகு நெல்சனின் டாக்டர், பீஸ்ட் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
மேலும் சமீபத்தில் வந்த ஜெயிலர் படத்திலும் அவர் நடித்து இருந்தார். இந்நிலையில் மாஸ்டர் படத்தில் விஜய்யின் தோழியாக நடித்த நடிகை சங்கீதாவை இன்று ரெடின் கிங்ஸ்லி திருமணம் செய்து உள்ளார்.
இந்த விஷயத்தை நடிகர் சதிஷ் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டு, திருமண வாழ்த்துக்கள். இந்த புகைப்படம் ஷூட்டிங் செட்டில் இருந்து எடுக்கவில்லை என்றும் உண்மையாக இருவரும் திருமணம் செய்திருக்கிறார்கள் என்றும் கூறப்பட்டு இருவரும் சமுகவலைத்தளத்தில் புகைப்படங்கள் வெளியாகின.
இந்நிலையில் ரெடின் கிங்ஸ்லி திடீர் திருமணம் அதுவும் அவசர அவசரமாக கல்யாணத்தை முடிக்க என்ன காரணம் என்று கேள்வி எழுந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பே நடிகை சங்கீதாவை அவர் காதலித்து வந்ததாகவும் எத்தனை நாள் திருமணத்தை தள்ளி போடுவீர்கள் என்று கேட்டதால் தான் ஒப்புக்கொண்டிருக்கிறாராம்.
மேலும் பெரியளவில் திருமணம் செய்தால் பல பிரபலங்களை அழைக்க நேரிட்டு செலவு ஏற்படும் என்பதற்காகவும் இருக்கலாம் என்று இணையத்தில் கூறி வருகிறார்கள். மேலும் இந்த திருமணத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் ஷாக்காகி மீம்ஸ் புகைப்படங்களை வெளியிட்டும் வருகிறார்கள்.
You May Like This Video