அட்ஜெஸ்மெண்ட் செய்து தான் இந்த நிலைமைக்கு வந்தேன்.. வெளிப்படையாக பேசிய ரெடின் கிங்ஸ்லி மனைவி

Indian Actress Tamil Actress Actress Redin Kingsley
By Dhiviyarajan Dec 12, 2023 01:15 PM GMT
Report

கோலிவுட் வட்டாரத்தில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் தான் ரெடின் கிங்ஸ்லி. சமீபத்தில் இவர் நடிகை சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார். எளிமையாக நடைபெற்ற இத்திருமணத்தில் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

அட்ஜெஸ்மெண்ட் செய்து தான் இந்த நிலைமைக்கு வந்தேன்.. வெளிப்படையாக பேசிய ரெடின் கிங்ஸ்லி மனைவி | Redin Kingsley Wife Sangeetha Open Talk

இந்நிலையில் கிங்ஸ்லியின் மனைவி சங்கீதா அளித்துள்ள பழைய பேட்டி தற்போது இணையத்தில் வருகிறது. அதில் அவர் கூறுகையில், சினிமாவில் நல்லவர்களும் இருக்கிறார்கள், கெட்டவர்களும் இருக்கிறார்கள். அவங்கள் யார் என்று தெரிந்து கொண்டு, அவர்களை கடந்து செல்வதுதான் சவாலாக இருக்கும்.

ஒரு பெண் சினிமாவில் நல்ல இடத்திற்கு சென்றுவிட்டால் அவர் அட்ஜஸ்ட்மென்ட் செய்து தான் இந்த நிலைமைக்கு வந்து இருப்பார் என்று சிலர் சொல்வதை கேட்கும் போது வருத்தமாக இருக்கும். ஆனால் ஒரு பெண் சினிமாவில் திறமையால் முன்னேறினர் என்று சொன்னால் யாரும் ஏற்றுக்கொள்வதில்லை.

என்னுடைய வாழ்க்கையில் ஏமாற்றங்கள், நம்பிக்கை துரோகம் போன்றவற்றை கடந்து வந்து இருக்கிறேன் என்று சங்கீதா கூறியுள்ளார்.