20 வயதில் அந்த தயாரிப்பாளர் அதற்கு கூப்பிட்டார்! மேனேஜரிடம் அட்ஜஸ்ட்மெண்ட்டிற்கு அர்த்தம் கேட்ட நடிகை ரெஜினா

actress producer Regina Cassandra
By Jon Mar 08, 2021 12:05 PM GMT
Report

தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு அட்ஜெஸ்ட்மெண்ட் என்பது சதாரணமாகிவிட்டது என்று பல நடிகைகள் மீடு மூலம் தெரியப்படுத்தி வருகிறார்கள். அப்படியாக முன்னணி நடிகைகளுக்கு கூட இப்படியான சம்பவங்கள் நடந்திருக்கிறது என்றும் கூறி வருகிறார்கள். அந்தநிலையில், சமீபத்தில் நடிகை ரெஜினா 20 வயதில் அப்படியான அட்ஜெஸ்ட்மெண்ட் தயாரிப்பாளரால் நடந்துள்ளது என்று கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை இடத்திற்கு முன்னேறி பல படங்களில் தமிழ், தெலுங்கு, கன்னடம் என நடித்து வருபவர் நடிகை ரெஜினா. தற்போது ஓரளவுக்கு கவனிக்கப்படும் நாயகியாக உயர்ந்திருக்கும் ரெஜினா சமீபத்தில் தைரியமாக தயாரிப்பாளர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்த செய்தியை ஓபனாக ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ரெஜினாவுக்கு 20 வயதாகி இருக்கும் போது ஒரு தயாரிப்பாளர் படத்தை பற்றி பேசிக்கொண்டிருக்கும் போதே பட வாய்ப்புக்காக சில அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் என குறிப்பிட்டார். அப்போது ரெஜினாவுக்கு தயாரிப்பாளர் என்ன சொல்கிறார் என்பது சரியாக புரியவில்லையாம். அதனைத் தொடர்ந்து தன்னுடைய மேனேஜரிடம் விசாரித்தபோதுதான் அட்ஜஸ்ட்மெண்ட் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரிந்தது எனவும், அதன்பிறகு அவருடைய போன் காலை எடுக்கவே இல்லையாம்.

மேலும் பல வகையில் ரெஜினாவுக்கு தொந்தரவு கொடுத்தாராம் அந்த தயாரிப்பாளர். இதனை ரெஜினா தயாரிப்பாளரின் பெயரை குறிப்பிடாமல் மற்ற நடிகைகளைப் போல மேலோட்டமாக அந்த விஷயத்தை கூறியுள்ளார். இதை அப்போதே தெரியப்படுத்தியிருக்கலாம் என்று நெட்டிசன்கள் கூறி கருத்துக்களை வெளிப்படுத்தி வருகிறார்கள்.