இந்த நடிகருடன் ரகசிய காதலில் நடிகை ரெஜினா! வைரலாகும் நள்ளிரவில் எடுத்த நெருக்கமான புகைப்படம்

Regina Cassandra Gossip Today
By Edward Dec 14, 2022 12:00 PM GMT
Report

சிவகார்திகேயன் நடிப்பில் வெளிவந்த கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரெஜினா. இதன்பின் ராஜதந்திரம், மாநகரம், சக்ரா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இந்த நடிகருடன் ரகசிய காதலில் நடிகை ரெஜினா! வைரலாகும் நள்ளிரவில் எடுத்த நெருக்கமான புகைப்படம் | Regina Love Secret Actor Post Viral Social Media

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் இவர் மிகவும் பிரபலமான நடிகையானார். தற்போது தமிழ், தெலுங்கு என பிஸியாக படங்களில் நடித்து வரும் ரெஜினா கிளாமரில் பட்டையை கிளப்பி வருகிறார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் பற்றிய கேள்விக்கு, 2020ஆம் ஆண்டு என்னுடைய காதல் முறிந்தது. அதிலிருந்து வெளிவர கொஞ்ச நாட்கள் ஆனது. இப்போது நான் யாரையும் காதலிக்கவில்லை.

திருமணம் பற்றிய பேச்சை எடுக்கவே மாட்டேன். வாழ்க்கையில் திருமணம் செய்து கொள்வேனா, இல்லையா என்பது எனக்கே தெரியவில்லை. ஏனென்றால், சிறு வயது முதல் எனது சொந்த காலில் சுயமாக எப்படி வாழ்வது என்பதை பற்றி தான் என் அம்மா எனக்கு கற்றுக்கொடுத்துள்ளார்.

இந்த நடிகருடன் ரகசிய காதலில் நடிகை ரெஜினா! வைரலாகும் நள்ளிரவில் எடுத்த நெருக்கமான புகைப்படம் | Regina Love Secret Actor Post Viral Social Media

எனவே வாழ்க்கையில் யாரவது துணையாக வேண்டுமா? வேண்டாமா என்பது குறித்து யோசிக்க மாட்டேன் என்று கூறி ஷாக் கொடுத்தார்.

இந்நிலையில் நேற்று அவரது பிறந்தநாளன்று தெலுங்கு நடிகர் சுந்தீப் மைக்கேல் ஹாப்பி பெர்த்டே பாப்பா, லவ் யூ அண்ட் அனைத்துக்கும் வாழ்த்துக்கள் என்று கூறி அவருடன் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் சுந்தீப்பை காதலிக்கிறீங்களா என்று கேள்வி கேட்டு வருகிறார்கள்.