20 வயதில் வாய்ப்புக்காக எனக்கும் அப்படி நடந்தது! 10 வருட சீக்ரெட்டை உடைத்த நடிகை ரெஜினா..

tamilactress regina cassandra
By Edward Nov 15, 2021 06:38 AM GMT
Report

பெண்களுக்கு எதிராக அனைத்துத்துறைகளிலும் உடல் மற்றும் மன ரீதியாக பல கொடுமைகளை சந்தித்து வருவது தினமும் செய்திகளில் பார்த்து வருகிறோம். அதில் சினிமாத்துறையிலும் வாய்ப்பிற்காக நடிகைகள் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்யும் கலாச்சாரத்தில் தள்ளப்பட்டு வருகிறார்கள்.

அந்தகாலத்தில் அதை மறைத்து இக்கட்டான சூழலில் தள்ளப்பட்டு வந்தனர். ஆனால் தற்போது நடிகைகள் மீ டூ அமைப்பு மூலம் தைரியமாக தங்களுக்கு நடந்ததை ஓப்பனா கூறி வருகிறார்கள். அப்படி தன்னுடைய 20வது வயதில் சினிமாவில் அறிமுகமாகிய சமயத்தில், எனக்கு ஒருவர் கால் செய்து அட்ஜெஸ்ட் செய்வீர்களா என்று கேட்டார்.

தொடர்ந்து மூன்று முறை கேட்டபிறகு தான் எனக்கு புரிந்தது. உடனே அவரது காலை முற்றிலுமாக கட்செய்து விட்டேன் என்று கூறியுள்ளார். கல்லூரியில் நான் படித்தபோது ஷாப்பிங் செய்த இடத்தில் ஒருவர் என் உதட்டை கிள்ளிவிட்டு சென்றது அதிர்ச்சியை அளித்தது.

வட இந்திய பெண்கள் இதற்கு உடனே முடியாது என்று கூறிவிடுவார்கள் ஆனால் தமிழ் பெண்கள் பொறுமையாக அமைதியாக என்னால் முடியாது என்று கூறுவார்கள் அவ்வளவு தான் வித்தியாசம் என்று நடிகை ரெஜினா குறிப்பிட்டுள்ளார்.