என்னை அப்படிப்பட்ட ஆண்டின்னு சொல்றாங்க..அதுக்கு நான்..நடிகை ரேகா நாயர் பளீச் பதில்..
ரேகா நாயர்
சின்னத்திரை சீரியல் நடிகையாக நடித்து இரவின் நிழல் படத்தில் சர்ச்சையான காட்சியில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ரேகா நாயர். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், பெண்கள் ஆடை அணிவது குறித்து சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
அதில், இலக்கிய கூட்டங்களுக்கு சேலை அணிந்து செல்வேன். சாதாரணமாக கடைகளுக்கு செல்லும் போது சுடிதார் அணிவேன். யோகா செய்யும் போது டீசர்ட் - பேண்ட் அணிந்து கொள்வேன். இப்படி ஒவ்வொரு சூழலுக்கேற்ப ஆடை அணிவது எனக்கு பொருத்தமானதாக இருக்கிறது.
நம் ஊரில் தான், பேண்ட் - சர்ட் அணியும் போது தலையில் பூ வைக்கக்கூடாது என்று கூறுகிறார்கள். ஆனால் அவ்வாறு சொல்வது தவறு, நமக்கு விருப்பமான வகையில் பூ வைத்துக்கொள்ளலாம்.
பூமர் ஆண்டி
இவ்வாறு செய்வதால் சிலர் என்னை பூமர் ஆண்டி என்று கூறுகிறார்கள். இப்படி மற்றவர்கள் கூறுவது குறித்து நான் கவலைப்படுவதில்லை. சில நேரங்களில் நான் பூமர் தனமாக தெரியலாம், சிலநேரத்தில் பார்க்க புரட்சியாளராக தெரியலாம். ஆண்களுக்கு ஆதரவாக பேசினால் என்மீது விமர்னங்கள் வருகிறது.
ஆண்களின் வாக்குகளை பெற்று நான் தேர்தலில் நிற்கபோவதில்லை. ஆண்களின் மனநிலையில் இருந்து சில சமயங்களில் நான் சிந்திக்கிறேன், அவ்வாறு பார்க்கும்போது அவர்கல் பாவமாக தெரிகிறார்கள். பெண்களின் சிகையலங்காரம், பியூட்டி பார்லருக்கு செல்வதை ஆண்களால் செய்ய முடியாது என்று நடிகை ரேகா நாயர் தெரிவித்துள்ளார்.