நான்சென்ஸ் மாதிரி பேசுறீங்க.. ரேகா நாயரை நிகழ்ச்சியில் வெளுத்து வாங்கிய பப்லு பிரித்விராஜ்..

Zee Tamil Gossip Today Babloo Prithiveeraj Rekha Nair
By Edward Sep 11, 2024 01:00 PM GMT
Report

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் தமிழா தமிழா நிகழ்ச்சியில் கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி ஜாதகத்தை உண்மை என்று நம்புவோர் - உண்மை இல்லை என்று விமர்சிப்பவர்கள் என்ற தலைப்பில் வாக்குவாதம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட நடிகர் பப்லு பிரித்விராஜிற்கு நடிகை ரேகா நாயருக்கு ஏற்பட்ட மோதல் தற்போது பெரியளவில் பேசப்பட்டு வருகிறது.

நான்சென்ஸ் மாதிரி பேசுறீங்க.. ரேகா நாயரை நிகழ்ச்சியில் வெளுத்து வாங்கிய பப்லு பிரித்விராஜ்.. | Rekha Nair Actor Bablu Prithiviraj Had A Conflict

அதில் ரேகா நாயர், நான் என் 19 வயதில் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். நான் என் கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டு இருந்தேன். ஒரு நாள் அந்த வீட்டில் கோடங்கி ஒருவர் இந்த வீட்டில் வண்டிக்கு ஏற்ற சக்கரம் இல்லை.. அது பிரிஞ்சு போய்விடும் என்று சொன்னதை போல் என் கணவர் என்னைவிட்டு பிரிந்துவிட்டார்.

காலையில் வேலைக்கு போனவர் மாலையில் வீடு திரும்பவில்லை அதன்பின் ஒரு யோதிடர், இரண்டாம் திருமணம் செய்துகொள் என்று கூறினார். நானும் இரண்டாம் திருமணம் செய்து கொண்டு தற்போது நன்றாக இருக்கிறேன்.

நான்சென்ஸ் மாதிரி பேசுறீங்க.. ரேகா நாயரை நிகழ்ச்சியில் வெளுத்து வாங்கிய பப்லு பிரித்விராஜ்.. | Rekha Nair Actor Bablu Prithiviraj Had A Conflict

அதேபோல் முதல் கணவருக்கு பிறந்த மகளோடு ஒன்றாக இருந்தால் அவள் இறந்துவிடுவாள், அல்லது நீ இறந்துவிடுவார் என்றார். அதனால் என் மகளை போடிங் ஸ்கூலில் சேர்த்து படிக்க வைக்கிறேன் என்று ரேகா நாயர் கூறியிருக்கிறார்.

உடனே பிரித்விராஜ், இங்கு எல்லோரும் படிச்சவங்க, ஒருவிஷயம் இருக்கு என்று நினைத்தால் இருக்கு, இல்லை என்று நினைத்தால் இல்லை என்று கூறியபோது கோவிலுடன் ஒப்பிட்டு ரேகா பேச, ஜோதிடம் பற்றி பேசுகிறோம் என்று கூறியிருக்கிறார்.

ரேகா குரலை உசத்தி பேசியதால் கோபமான பிரித்விராஜ், நீங்க குரலை ஒசத்தி பேசினா சரின்னு ஆயிடுமா? நான்சென்ஸ் மாதிரி பேசுறீங்க... நான்சென்ஸ்.. என்று ரேகா நாயரை பார்த்து கத்தியிருக்கிறார். குறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.