தளபதி படத்தை காப்பி அடிச்சாங்களா? இது நம்ம லிஸ்ட்லயே இல்லப்பா..
தமிழ் சினிமாவில் சில படங்கள் மற்ற மொழிகளில் இருந்து கதையை உல்டாவாக எடுத்து வெளியிடுவது தற்போது அதிகரித்து வருகிறது. அதிலும் கொரியன் படங்களின் ரீமேக்கும் அதிகமான இயக்குநர்கள் இயக்கி வருகிறார்கள்.
அப்படி சமீபத்தில் வெளியான மாநாடு படம் சில டைம்லூப் படங்களில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிதான் மாநாடு என்று அதன் இயக்குநர் வெங்கட் பிரபு கூறியிருந்தார். இந்நிலையில் விஜய்யின் குருவி, மின்சார கண்ணா, அழகிய தமிழ்மகன் படங்கள் ரீமேக் செய்துள்ளதை நெட்டிசன்கள் கலாய்க்கும் விதமாக இணையத்தில் மீம்ஸ் வெளியிட்டுள்ளனர்.
கேஜிஎஃப் படம் குருவி ரீமேக் என்றும் பாராசைட் படம் மின்சார கண்ணா ரீமேக், அழகிய தமிழ் மகன் மாநாடு பட்த்தின் ரீமேக் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு சிலர் விஜய்யின் அந்த மூன்று படங்களில் பிளாப் தான் என்று கூறி வருகிறார்கள். ரீமேக் படத்துல விஜய் நடிக்கல அவர் படத்த தான் ரீமேக் செய்யுறாங்க என்று ஒருசிலர் கிண்டலடித்து வருகிறார்கள்.
