குட் பேட் அக்லி சொதப்பிவிட்டதா.. பத்திரிகையாளரின் பேச்சால் கடுப்பான அஜித் ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருக்கும் அஜித்தின் நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி. இப்படத்தை அஜித்தின் தீவிர ரசிகரும் பிரபல இயக்குநருமான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார்.
நேற்று இப்படத்தின் டிரைலர் வெளிவந்து Youtubeல் பல மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. வருகிற ஏப்ரல் 10ம் தேதி இப்படம் வெளிவரவுள்ள நிலையில், இப்படம் குறித்து பத்திரிகையாளர் பேசியது படுவைரலாகி வருகிறது.
இதில் மூத்த பத்திரிகையாளர் பிஸ்மி பேட்டி ஒன்றில் பேசியபோது, "திரை வட்டாரத்தில் குட் பேட் அக்லி படம் குறித்து பாசிட்டிவ் தகவல்கள் எப்படி பரவுகிறதோ, அதே போல் நெகட்டிவ் தகவல்களும் பரவி வருகிறது. நமக்கு வரும் போன்கால்களில் கூட, 'தலைவா கேள்விப்படீங்களா குட் பேட் அக்லி சொதப்பிட்டாராம்ல' என்கிற தகவலை தான் ஷேர் செய்கிறார்கள்", அவர் அந்த பேட்டியில் பேசியுள்ளார்.
இவர் பேசியதை தொடர்ந்து அஜித் ரசிகர்கள் பலரும் மூத்த பத்திரிகையாளர் பிஸ்மியை சமூக வலைத்தளத்தில் கடுமையாக தாக்கி பேசி வருகிறார்கள்.