சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு காசு கொடுத்த விஜய்!! உண்மையை கூறி அசிங்கப்படுத்திய பத்திரிக்கையாளர்..

Vijay
By Edward Feb 01, 2023 08:26 AM GMT
Report

தமிழ் சினிமாவில் தற்போது அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற கேள்வி பல நடிகர்களின் ரசிகர்கள் மத்தியில் ஒரு போட்டியாக இருந்து வருகிறது. இதுகுறித்து சமீபத்தில் வாரிசு ஆடியோ லான்ச் நிகழ்ச்சியின் போது நடிகர் சரத்குமார் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

இதுகுறித்து பலர் ஆதரவாகவும் எதிர்த்தும் கருத்துக்களை கூறி வந்த நிலையில் நடிகர் நெபோலியன் அவர்கள் விஜய் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சரத்குமார் கூறியது குறித்து சமீபத்திய பேட்டியின் ஓப்பனாக கூறியுள்ளார்.

இந்நிலையில் மூத்த பத்திரிக்கையாளரான சமீதா ஜோசப், விஜய், சூப்பர் ஸ்டார் பட்டத்திற்காக ஒரு பத்திரிக்கையில் காசு கொடுத்து சர்வே நடத்த தூண்டிவிட்டு, அதில் தன்னுடைய பெயர் தான் எனவும் வெளியிட சொல்லியதாக அவர் கூறியுள்ளார். இப்படி விஜய் நடந்து கொண்டதை பல ஆண்டுகளுக்கு பிறகு போட்டுடைத்துள்ளார்.