நீ கேவலமா இருக்க!! கலாய்த்தவருக்கு சரியான பதிலடி கொடுத்த பாக்யலட்சுமி ரேஷ்மா..
ஆங்கில செய்தி தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக பணியாறி தற்போது சீரியல் நடிகையாக திகழ்ந்து பிரபலமாகி வருபவர் நடிகை ரேஷ்மா பசுலடி. இரு திருமணம் செய்து அவர்களால் ஏமாற்றமடைந்து இந்தியா பக்கம் தன் மகனுடன் வசித்து வருகிறார் ரேஷ்மா.
பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு வெளியேறிய ரேஷ்மா தற்போது பாக்கியலட்சுமி, சீதா ராமன் உள்ளிட்ட பல சீரியல்களிலும் நடித்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருந்து போட்டோஷூட் புகைப்படம் வீடியோக்களை பகிர்ந்து வரும் ரேஷ்மா லைவ் சேட்டில் சில விசயத்தை பகிர்ந்துள்ளார்.
சமீபத்தில் ஆண் நண்பருடன் நெருக்கமாக போட்டோஷூட் நடத்தி வெளியிட்டதால் கல்யாணமா என்று பலர் கேள்வி கேட்டு வந்தனர். அதற்கு ரேஷ்மா, Bridal Photoshoot-க்காக நான் அந்த போட்டோஷூட் எடுத்தேன்.
அது வெறும் போட்டோஷூட் மட்டும் தான் வேறு எதுவும் இல்லை, அது 1 வருடத்திற்கு முன் எடுத்ததாக கூறியுள்ளார். இந்த வீடியோவிற்கு ஒரு நபர் நீ கேவலமா இருக்க என்று கூறியுள்ளார். அதற்கு ரேஷ்மா, ஓகே என்று கூறி பதிலடி கொடுத்திருக்கிறார்.
