புஷ்பா புருஷன் காமெடியால் மாறிய ரேஷ்மாவின் வாழ்க்கை.. நடிகை எடுத்த முடிவு
ரேஷ்மா
சின்னத்திரையில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ரேஷ்மா. இவர் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா எனும் கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் 2009ல் இருந்து சீரியல்களில் நடிக்க துவங்கிவிட்டார்.
வாணி ராணி, பகல் நிலவு, வம்சம், அன்பே வா, சீதா ராமன் என பல சீரியலில் நடித்துள்ளார். வெள்ளித்திரையில் மசாலா படம் என்கிற படத்தின் மூலம் அறிமுகமானார். பின் வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் நடித்தார்.
இப்படத்தின் மூலம் வெள்ளித்திரையிலும் பிரபலமானார். ஆனால், இப்படத்தினால் இவருக்கு புகழ் மட்டும் கிடைக்கவில்லை, சில மோசமான அனுபவங்களையும் இப்படத்திற்கு பின் சந்தித்துள்ளது. அதுகுறித்து நடிகை ரேஷ்மா பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
நடிகை எடுத்த முடிவு
அவர் கூறியதாவது "வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் நான் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். அந்த படத்தில் புஷ்பா புருஷன் காமெடி மிகப்பெரிய ஹிட் ஆனது. அந்த படத்திற்கு பிறகு எனக்கு வந்த வாய்ப்புகள் எல்லாமே அதே சாயலில் இருந்தன. ரெக்கார்ட் டான்ஸ் ஆடும் பெண்ணாகத்தான் நடிக்க கேட்டார்கள். அதனால் சினிமாவே வேண்டாம் என கூறிவிட்டு டிவி சீரியல்களில் நடிக்க ஆரம்பித்து விட்டேன்" என கூறியுள்ளார்.