அந்த இடத்தில் டாட்டூவை பார்க்க முடியாது! தாறுமாறாக பதிலளித்த சீரியல் நடிகை..

Serials Baakiyalakshmi Reshma Pasupuleti
By Edward Jun 06, 2022 11:06 AM GMT
Report

வேலைன்னு வந்துட்டன் வேலைக்காரன் படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரம் மூலம் தமிழ் சினிமாவிற்கு பரீட்சையமானவர் நடிகை ரேஷ்மா பசுபுலடி. மசாலா படத்தின் மூலம் அறிமுகமாகி கோ 2, மணல் கயிரு, பேய் மாமா, வணக்கம் டா மாப்பிள்ளை போன்ற படங்களில் நடித்துள்ளார்.

பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளீப்பரப்பாகிய பிக்பாஸ் 3 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். அதன்பின் ஒருசில சீரியல்களில் நடித்துள்ள ரேஷ்மா, பாக்யலட்சுமி சீரியலில் கோபியின் கள்ளக்காதலியாக நடித்து வருகிறார்.

இந்த சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருப்பதால் இவரில் ரோல் கதைக்கு முக்கியமானதாக அமைந்து வருகிறது. மேலும், அபி டெய்லர், அன்பே வா போன்ற சீரியல்களிலும் நடித்து வருகிறார். சமுகவலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா க்ளாமர் போட்டோஷூட் என வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார்.

சமீபத்தில் வெளியிட்ட ஒரு பதிவிற்கு ஒரு ரசிகர், இடுப்பில் குத்தியுள்ள டாட்டூவின் அர்த்தம் என்ன என்று கேட்டுள்ளார். அதற்கு தயங்காமல் பதிலளித்த ரேஷ்மா, அந்த டாட்டூவை நீங்கள் முழுமையாக பார்க்க முடியாது.

பெரிய டாட்டூவாக இருக்கும். இரண்டு அழகான ரோஜாக்கள் விரிந்து இருப்பது தான் அந்த நாட்டு. இதை நான் ரொமாண்ட்டிக்காக வைத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

Gallery