டூரிஸ்ட் பேமிலியிடம் அடி வாங்கும் ரெட்ரோ, குருநாதா இதுக்கு மேல முடியாது குருநாதா!
ரெட்ரோ, டூரிஸ்ட் பேமிலி
தமிழ் சினிமாவில் சிறு பட்ஜெட் படங்கள் எப்போதும் சர்ப்ரைஸ் ஹிட் அடிப்பது வழக்கம் தான். அதில் கடந்த வருடம் லப்பர் பந்து படம் செம ஹிட் அடித்தது.
இந்த வருடம் குடும்பஸ்தன் படம் பெரிய வரவேற்பு பெற, அதை தொடர்ந்து சசிகுமார் நடிப்பில் டூரிஸ்ட் பேமிலி படம் தற்போது பெரும் வரவேற்பு பெற்று வருகின்றது.
இவை எந்த அளவிற்கு என்றாலும் கம்மி திரையரங்கம் என்றாலும் சூர்யாவின் ரெட்ரோ படத்திற்கு இணையாக பல இடங்களில் இந்த படமும் ஹவுஸ்புல் ஆகி வருகின்றது.
மேலும், நாளுக்கு நாள் டூரிஸ்ட் பேமிலி திரையரங்கம் மற்றும் காட்சிகள் அதிகரிக்க, கண்டிப்பாக திங்கள் கிழமை முதல் டூரிஸ்ட் பேமிலி, ரெட்ரோவை மிஞ்சினாலும் ஆச்சரியமில்லை என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இதனால் சூர்யா ரசிகர்கள் பல வருடமாக ஹிட் இல்லாமல் இருக்க, இதற்கு மேல் முடியாது குருநாதா நல்ல கமர்ஷியல் படமாக நடியுங்கள் என ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்,