அந்த வயதில் கல்யாணம், கூடவே கூடாது.. வருத்தத்தில் நடிகை ரேவதி

Revathi Tamil Cinema Marriage Actress
By Bhavya Jul 11, 2025 04:45 AM GMT
Report

ரேவதி

தமிழ் சினிமாவில் 80 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரேவதி. 1983ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான மண் வாசனை திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர்.

நடித்த முதல் படத்திலேயே மிகப் பெரியளவில் வெற்றிப் பெற்று சிறந்த நடிகைக்கான விருது பெற்றார். முதல் படத்தின் மூலமே ரேவதியின் மார்க்கெட் உயர தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி திரையுலகிலும் அடுத்தடுத்து படங்கள் நடித்து வந்தார்.

நடிகையாக மட்டுமில்லாது இயக்குநர் அவதாரமும் எடுத்தார். இவர் ஒளிப்பதிவாளர் சுரேஷ் மேனனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார்.

அந்த வயதில் கல்யாணம், கூடவே கூடாது.. வருத்தத்தில் நடிகை ரேவதி | Revathi About Her Marriage Life

அந்த வயதில் கல்யாணம்

இந்நிலையில், பேட்டி ஒன்றில் திருமணம் குறித்து நடிகை ரேவதி பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், " சினிமாவில் எந்த வருத்தமும் இல்லை என்றாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு பெரிய வருத்தம் உள்ளது.

அதாவது, சரியான வயதில் திருமணம் செய்துகொள்ளாதது தான் பெரிய வருத்தம், நான் திருமணம் செய்த வயதில் செய்திருக்கக் கூடாது. இன்னும் 4 வருடங்கள் கழித்துச் செய்திருக்க வேண்டும்" என பேசியுள்ளார்.  

அந்த வயதில் கல்யாணம், கூடவே கூடாது.. வருத்தத்தில் நடிகை ரேவதி | Revathi About Her Marriage Life