17 வயது பாவாடையும் குளிக்கும் காட்சி!! முடியாதுன்னு சொல்லியும் இயக்குநர் செய்த செயல்...

Revathi Bharathiraja Tamil Actress Actress
By Jai Jul 26, 2026 08:15 AM GMT
Report

நடிகை ரேவதி

தமிழ் சினிமாவில் 80, 90களில் கொடிக்கட்டி பறந்த நாயகியாக திகழ்ந்து தற்போது இயக்குநராகவும் குணச்சித்திர நடிகையாகவும் திகழ்ந்து வருகிறார் நடிகை ரேவதி. பாரதிராஜா அறிமுகப்படுத்திய நடிகையாக மண் வாசனை படத்தின் மூலம் எண்ட்ரி கொடுத்தார் ரேவதி. சமீபத்தில் நடந்த பேட்டியொன்றில் கலந்து கொண்டு மண்வாசனை படத்தின் நினைவுகளை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

17 வயது பாவாடையும் குளிக்கும் காட்சி!! முடியாதுன்னு சொல்லியும் இயக்குநர் செய்த செயல்... | Revathi Interesting About Manvasanai Movie Secret

அதில், மண்வாசனை படத்தில் பொத்தி வச்ச மல்லிகை மொட்டு பாடலில் நான் பாவாடை கட்டிக்கொண்டு தண்ணீரில் குளிப்பது போன்ற காட்சி இருந்தது. அந்தக் காட்சியை பற்றி என்னிடம் கூறியதுமே எனக்கு பயம் வந்தது. உடனே என் அம்மாவிடம் சென்று முடியாது என்று கூறினேன். அப்போது எனக்கு வெறும் 17 வயதுதான்.

அதுவரை பொது இடங்களில் பாவாடை கட்டி, முதுகைக்காட்டி குளித்த பழக்கமே இல்லை. அதனால் முடியாது என்று சொன்னேன். உடனே அம்மா பாரதிராஜாவிடம் சென்று, எங்களை மன்னித்துவிடுங்கள் சார். இதற்கு மேல் என் மகளால் நடிக்க முடியாது.

17 வயது பாவாடையும் குளிக்கும் காட்சி!! முடியாதுன்னு சொல்லியும் இயக்குநர் செய்த செயல்... | Revathi Interesting About Manvasanai Movie Secret

இதுவரை படப்பிடிப்பிற்கு எவ்வளவு பணம் செல்வானதோ, அந்த பணத்தை நாங்களே திருப்பித் தருகிறோம் என்று சொன்னார்கள். அதன்பின் பாரதிராஜா சார், அம்மாவை சமாதானப்படுத்தி, என்னையும் சமாதானப்படுத்தி, எனக்கு கூச்சமும் பயமும் போக வேண்டும் என்பதற்காக, படப்பிடிப்பில் இருந்த மேலும் பல பெண்களை அதேபோல் பாவாடை கட்ட வைத்து என்னுடன் சேர்ந்து நிற்க வைத்தார்.

ஆனால் படத்தில் அந்த பாட்டில் நான் மட்டும் தான் வருவேன். இயக்குநர் பாரதிராஜாவின் இந்த சமயோசிதமான செயலால் தான் அந்த ஐகானிக் பாடல் காட்சி உருவானது என்று ரேவதி தெரிவித்துள்ளார்.