காசுக்காக இல்ல, வாய்ப்புக்காக அதை செய்தேன்!! தனுஷ் பட நடிகை ரிச்சா கூறிய உண்மை..
தெலுங்கில் 2010ல் வெளியான லீடர் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியாவர் நடிகை ரிச்சாஅ கங்கோபத்யாய். அதன்பின் தனுஷ் நடிப்பில் வெளியான மயக்கம் என்ன படத்திலும் சிம்பு நடிப்பில் வெளியான ஒஸ்தி படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானார்.
சினிமாவில் அறிமுகமாகிய ஒருசில ஆண்டுகளில் நான் இனிமேல் நடிக்க போவதில்லை என்றும் பிடித்த வேலையை செய்யப்போவதாகவும் கூறி திருமணம் செய்து செட்டிலாகினார். இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், சினிமாவில் நடிக்காமல் விலக காரணம் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
சினிமாவில் நடிகையாக வேண்டும் என்ற ஆசை இருந்ததாகவும் தற்போது சிறந்த தொழிலதிபராக வேண்டும் என்ற ஆசை தோன்றியிருக்கிறது. வாஷிங்டன் யூனிவர்சிட்டியில் எம்பி ஏ படித்து முடித்து இருக்கிறேன். தொழிலில் சாதிக்க வேண்டும் என்று பல ஆசை இருந்தது.
சினிமாவில் நடித்த உடனே சம்பாதித்துவிடலாம். ஆனால் எனக்கு போதுமான பணம் இருப்பதால் பணத்திற்காக சினிமாவில் ஓடுவது எனக்கு விரும்பம் இல்லை என்று கூறியிருக்கிறார்.
மேலும் அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றிய கேள்விக்கு, முதல் இந்த கேள்வியை பெண்ணிடம் கேட்பதற்கு ஒரு தைரியம் வேண்டும், நீங்கள் கேட்கிறீர்கள். என்னை படவாய்ப்பு தருவதாக படுக்கைக்கு அழைக்கவில்லை என்றும் கவர்ச்சியான காட்சியில் நடிக்க வேண்டும் என்றே கேட்டார்கள்.
படவாய்ப்பு மற்றும் ரசிகர்களுக்காக தான் கவர்ச்சியாக நடித்ததாகவும் ரிச்சா கூறியிருக்கிறார். கவர்ச்சி ஆடை அணிந்து வரசொல்வார்கள், இந்த காட்சிக்கு இது தேவையா என்று நான் கேட்க வேறு உடை மாற்றிக்கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார்கள் சிலர் என்று தெரிவித்துள்ளார்.
இதனால் தான் சில சங்கடங்களை எதிர்கொண்டதாகவும் படுக்கைக்கு யாரும் கூப்பிடவில்லை என்றும் யாரிடமும் நெருக்கமாக பழகமாட்டேன் என்றும் தெரிவித்திருக்கிறார்.