அதுக்காக வெறும் இத்தனை கோடி தானா!! பொன்னியின் செல்வன் படத்தில் திரிஷா வாங்கிய சம்பளம்..
ஜோடி படத்தில் கதாநாயகிக்கு தோழியாக நடித்து நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை திரிஷா. மிஸ் சென்னை பட்டத்தை பெற்றப்பின் மெளனம் பேசியதே படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகினார். அதன்பின் அடுத்தடுத்த படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து தன்னுடைய மார்க்கெட்டை உயர்த்தினார்.
இதன்பின் சில பிரச்சனைகளை சந்துத்த திரிஷா கேரியரில் கவனம் செலுத்த முடியாமல் வாய்ப்புகளை இழந்து வந்தார். தற்போது மீண்டும் தன் ஆட்டத்தை ஆரம்பித்திருக்கும் திரிஷா பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்துள்ளார்.
முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி சுமார் 500 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. இதனை தொடர்ந்து வரும் ஏப்ரல் 28ல் வெளியாகவுள்ள நிலையில் திரிஷா பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.
தற்போது திரிஷா பொன்னியின் செல்வன் படத்திற்காக 3 கோடி மட்டுமே சம்பளமாக பெற்றுள்ளாராம். இரு பாகங்களிலும் பல காட்சிகளில் வரும் குந்தவையாக நடித்த திரிஷாவுக்கு 3 கோடி மட்டுமே சம்பளமாக கொடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும் நடிகர் விஜய்யின் லியோ படத்தில் நடித்துள்ள திரிஷா ஒரு படத்திற்காக 3 கோடி சம்பளமாக பெறுவதால், லியோ படத்திற்காக 4 கோடியில் இருந்து 5 கோடி சம்பளமாக பெற்றுள்ளார் என்ற தகவலும் கசிந்துள்ளது.