2 ஆண்டுகள் தேவை.. 54 வயதில் தன்னை விட 17 வயது இளைய பெண்ணை திருமணம் செய்த நடிகர்!
Vijay Deverakonda
Actors
Kingdom
By Bhavya
சினிமா துறை பொறுத்தவரை வயது பார்த்து திருமணம் செய்து கொள்ள மாட்டனர். அந்த வகையில், 54 வயதான நடிகர் தன்னைவிட 17 வயது இளையவரை திருமணம் செய்துகொண்டார்.
இவரா?
அவர் யார் தெரியுமா? விஜய் தேவரகொண்டா நடிப்பில் திரையரங்குகளில் வெளியான தெலுங்கு படம் ‘கிங்டம்'. இந்த படத்தில் நடித்த மனிஷ் சவுத்ரி தான் அந்த நடிகர்.
இவர் கடந்த 2023-ம் ஆண்டு தனது 54 வயதில் ஸ்ருதி மிஸ்ராவை திருமணம் செய்துகொண்டார். ஸ்ருதிக்கு அப்போது வயது 37.
இருவருக்கும் இடையில் 17 ஆண்டுகள் வயது வித்தியாசம் உள்ளது. இந்த வயது வித்தியாசம் குறித்து பேட்டி ஒன்றில் மனிஷ் சவுத்ரி பகிர்ந்துள்ளார்.
அதில், " எங்களுக்கு இந்த வயசு வித்தியாசம் பெரிய பிரச்சினையாக இருக்கவில்லை. ஆனால், ஸ்ருதிக்கு அவரது வீட்டில் உள்ளவர்களை சமாதானப்படுத்த 2 ஆண்டுகள் தேவைப்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.