ஒரு படம் கூட நடிக்கவில்லை..சொத்து மட்டும் ரூ. 700 கோடி!! யார் இந்த பிக்பாஸ் 9 ரிது சவுத்ரி..
ரிது சவுத்ரி
தெலுங்கு தொலைக்காட்சியில் பிக்பாஸ் தெலுங்கு சீசன் 9 சமீபத்தில் தொடங்கியுள்ளது. இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ள களமிறங்கியுள்ளார் நடிகை ரிது சவுத்ரி. தொலைக்காட்சி தொகுப்பாளினியாக தன் பயணத்தை ஆரம்பித்த ரிது, சீரியல்களில் நடித்ததால் பிரபலம் என்ற அந்தஸ்த்தை தந்தது.
ஷார்ட் பிலிம்ஸ்களிலும் நடித்திருக்கும் ரிது, தெலுங்கில் வெளிவந்த ஜபர்தஸ்ட் நிகழ்ச்சி மேலும் புகழை கொடுத்தது. வெளிப்படையான நகைச்சுவை திறன், அழகு என மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தது. தற்போது நடிகர் நாகர்ஜுனா தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 9ல் கலந்துள்ளார்.
பிக்பாஸ் 9
பிக்பாஸ் வீட்டில் அதிக சம்பளம் வாங்கும் போட்டியாளர்களில் இவரும் ஒருவர். ஒரு நாளைக்க் அவரது வருமாணம் ரூ. 39,000. ஒரு வாரத்திற்கு ரூ. 2.24 லட்சம் வரை பெறுகிறாராம். தற்போது ரிது சவுத்ரியின் பெயர் ஆந்திர அரசியலிலும் அடிபட்டு புயலை கிளப்பி வருகிறது.
ஒரு படத்தில் கூட நடிக்காத ரிதுவின் பெயரில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாகவும் இதுதொடர்பான ஆவணங்களும் வைரலாகியது. சீமகுர்த்தி ஸ்ரீகாந்த் என்பவருக்கு இரண்டாம் தாரமாக திருமணம் செய்து கொண்டார் ரிது சவுத்ரி.
அவருக்கு ரூ 700 கோடி மதிப்புள்ள நிலங்கள், விஜயவாடா மற்றும் இப்ராஹிம் பட்டணம் பகுதிகளில் இருப்பதாகவும், இந்த சொத்துக்கள் மோசடி மூலம் பெறப்பட்டதாகவும் புகார் எழுந்தது.
700 கோடி மதிப்புள்ள சொத்து
ஸ்ரீகாந்த், ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் ஆட்டியின் போது ஆந்திராவின் விஜயவாடா, இப்ராஹிம்பட்டணம் பகுதிகளில் நிலங்களை வாங்கியிருந்த நிலையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் துணப்பதிவாளர் தர்மா சிங், தான் கடத்தப்பட்டு கோவாவில் வீட்டு சிறையொல் அடைக்கப்பட்டதாகவும், ரூ. 700 கோடி மதிப்புள்ள சொத்துக்களை கட்டாயமாக பதிவு செய்ய ஸ்ரீகாந்த் வற்புறுத்தியதகவும் புகாரளித்துள்ளார்.
இப்படி ஆந்திர நில மாஃபியாவில் ரிது சவுத்ரியின் பெயர் இடம்பெற்றிருப்பதும் தர்மா சிங் குறிப்பிட்ட இந்த சொத்துக்கள் ரிது சவுத்ரி பெயரில் பதிவாகியுள்ளன. இதே நில மோசடியில் முன்னாள் ஆந்தர முதல்வர் ஒய் எஸ் ஜெகனின் சகோதரர் ஒய் எஸ் சுனில் மற்றும் ஜெகன் பி ஏ நாகேஷ்வர் ரெட்டி பெயர்களும் அடிப்பட்டதால் ஆந்திர அரசு தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தொடர்பு இல்லை
இதுகுறித்து ரிது சவுத்ரி, ஸ்ரீகாந்த் உடன் வசிக்கும்போது அவர் நில ஆவணங்களில் கையெழுத்திட சொன்னதால் கையெழுத்திட்டேன் என்றும் இந்த சொத்துக்கள் கோடிக்கணக்கான மதிப்புள்ளவை என்பது எனக்கு தெரியாது. ஆனால் கடந்த ஒரு வருடமாக ஸ்ரீகாந்தை விட்டு விலகி இருக்கிறேன். எனக்கும் அவருக்கும் தற்போது எந்த தொடர்பும் இல்லை என்றும் ரிது சவுத்ரி தெரிவித்துள்ளார்.