அடுத்த டார்ச் லைட்டுக்கு தயாரா!! வாய்ப்பிற்காக பிக்பாஸ் ரித்விகா எடுத்த போட்டோஷூட்..
Bigg Boss
By Edward
ஸ்டார் விஜய் டிவியில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். இந்நிகழ்ச்சியில் 2வது சீசனில் கலந்து கொண்டு டைட்டில் வின்னராகி கோப்பையை கைப்பற்றியவர் நடிகை ரித்விகா.
பரதேசி, மெட்ராஸ், கபாலி, இருமுகன்ம் சிகை உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்த ரித்விகா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் வாய்ப்பில்லாமல் இருந்து வந்தார்.
அதனால் டார்ச் லைட் என்ற படத்தில் விபச்சாரப்பெண் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதன் பின் போட்டோஷூட் பக்கம் சென்ற ரித்விகா, கிளாமர் பக்கம் சென்று வாய்ப்பு தேடி வருகிறார். சமீபத்தில் ரசிகர்கள் வாய்ப்பிளக்க வைக்கும் படியாக ஆளே மாறியபடி மாடர்ன் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

