நிச்சயதார்த்த புகைப்படத்தை டெலீட் செய்த பிக்பாஸ் டைட்டில் வின்னார் ரித்விகா!! காரணம் இதான்..

Riythvika Panneerselvam Bigg Boss Tamil Actress Actress
By Jai Apr 25, 2026 12:45 PM GMT
Report

ஒருநாள் கூத்து, பரதேசி, கபாலி, இருமுகன், ஓநாய்கள் ஜாக்கிரதை, டார்ச்லைட் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரித்விகா. பிக்பாஸ் சீசன் 2 போட்டியில் கலந்து கொண்டு டைட்டிலை கைப்பற்றிய ரித்விகா, சினிமாத்துறையில் அடுத்தடுத்த வாய்ப்புகள் பெற்று நடித்து வந்தார்.

கடந்த ஆண்டு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிச்சயதார்த்த புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார் ரித்விகா. நீண்டநாள் நண்பரான வினோத் லட்சுமணன் என்பவருடன் 2025 ஆகஸ்ட் மாதம் நிச்சயம் செய்தவர் எதிர்பாராத சூழ்நிலை காரணமாக திருமணத்தை ஒத்திவைத்ததாக அவர் தரப்பில் கூறப்பட்டது.

இந்நிலையில், சமூக வலைத்தள பக்கத்தில் ரசிகர் ஒருவர், உங்களுடைய திருமணத்தில் ஏதாவது பிரச்சனையா? என்று கேட்க அதற்கு ரித்விகா, வாழ்க்கையில் எல்லாம் நாம் நினைத்தபடி நடப்பதில்லை என்று கூறியிருக்கிறார்.

அதோடு மட்டுமில்லாமல் இன்ஸ்டாகிராமில் தன்னுடைய நிச்சயதார்த்த புகைப்படங்களை டெலீட் செய்துள்ளது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.