நிமிர்ந்து நடந்தால் அந்த இடம் பெரிசா தெரியுது..அது என்னோட பிரச்சனை!! பிக்பாஸ் ஆர்ஜே ஆனந்தி ஓபன் டாக்..

Anandhi Bigg Boss Actress
By Edward Mar 28, 2026 07:27 AM GMT
Report

ஆர் ஜே ஆனந்தி

பலரும் பேசத் தயங்கும், பேச மறுக்கும், அதேபோல் பேச தவிர்க்கும் பல விஷயங்களில் வளர வளர பெண்களின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தான புரிதலுடன் பேசுவதுதான்.

அதிலும் குறிப்பாக மாதவிடாய் சுழற்சி, உடல் பாகங்களில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஒரு தெளிவான அறிவுடன் பேசுவதோ, மற்றொருவருக்கு அவை குறித்த அறிவை உண்டாகுவதோ அரிதான விஷயம் கிடையாது. அப்படி தன்னுடைய சொந்த அனுபவத்தை வைத்து வெளிப்படையாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பேசி வருகிறார் பிக்பாஸ் பிரபலம் ஆர் ஜே ஆனந்தி.

நிமிர்ந்து நடந்தால் அந்த இடம் பெரிசா தெரியுது..அது என்னோட பிரச்சனை!! பிக்பாஸ் ஆர்ஜே ஆனந்தி ஓபன் டாக்.. | Rj Anandhi Opens Up On Body Image Struggles

மார்பு பெரிதாக தெரியாது

சமீபத்தில் அவர் வெளியிட்ட வீடியோவில், நான் டீ சர்ட் போட்டு ஒருமுறை வெளியே சென்றபோது ஒரு மூதாட்டி ஒருவர், நீ வயதுக்கு வந்துவிட்டாய், உள்ளாடை எல்லாம் போடணும் இல்ல, இல்லையினா தெரியுமில்ல என்று கூறினார். நான் அதுவரை என்னுடைய மார்பகங்கள் குறித்து யோசித்தது இல்லை, ஆனால் அந்த மூதாட்டி சொன்னது அந்த நாள் முழுவதும் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது.

நான் எனக்கு செளகரியமான டீசர்ட்டை அணிந்து வருகிறேன், அது யார் கண்களுக்கு உறுத்தினாலும் அது அவர்களின் பிரச்சனை. ஆனால் அந்த மூதாட்டி சொன்னது இன்றுவரை என் மனதில் உள்ளது. நான் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சனை என்றால், என் மார்பகம் வளர வளர அது பெரிதாக தெரியக்கூடாது என்று, கைகளை மடக்கி குறுகியவாரே தான் அமர்ந்திருப்பேன். அதனால் மார்பு பெரிதாக தெரியாது.

நிமிர்ந்து நடந்தால் அந்த இடம் பெரிசா தெரியுது..அது என்னோட பிரச்சனை!! பிக்பாஸ் ஆர்ஜே ஆனந்தி ஓபன் டாக்.. | Rj Anandhi Opens Up On Body Image Struggles

அதுவே நிமிர்ந்து அமர்ந்தால் மார்பு பெரிதாக தெரியும். கைகளை குறுக்கியவாரு அமரும்போது ஒரு கட்டத்திற்கு மேல் கூன் விழுந்ததுபோல் ஆகிவிடும். நான் குறுகியே அமர்ந்திருந்து பழகிவிட்டதால் என் தோள்பட்டைகள் கூன் விழுந்தது போல மாறிவிட்டது. நெஞ்சை நிமிர்த்தி நிற்க முடியவில்லை. பாலிக்கு ஒருமுறை சென்றபோது அங்கு ஆப்பிரிக்க ஜோடி நடந்து வந்தனர்.

அப்போது அதில் அந்த பெண் நெஞ்சை நிமிர்த்தி நடந்து சென்றார்; அதை பார்க்கும்போது எவ்வளவு தன்னம்பிக்கையுடனும் தையரித்துடனும் இருக்கிறார்கள் என்று தோன்றியது. மார்பகம் என்பது என்னுடைய உடலில் ஒரு பகுதி, இதனால் ஏற்படும் எதிலிருந்தும் என்னால் தப்பிக்க முடியாது. என்னுடைய மார்பகம் வளர்வது என்னுடைய கட்டுப்பாட்டில் இல்லை.

பாதாம் சாப்பிட்டால் மார்பகம் வளரும் என்று என் பாட்டி சொல்லி இருந்ததால், ஊட்டச்சத்து நிபுணர்கள் பாதாம் சாப்பிடச் சொன்னால் கூட மார்பகம் வளர்ந்துவிடுமே என்ற எண்ணம் வரும். பேட்டியில் பேசியபோது அந்த கமெண்ட்டில் ஒரு சிலர், அவ்வளவு பெருசா ஒன்னும் இல்லையே என்று கமெண்ட் போட்டனர். உனக்கு பெரிசா இருக்கா இல்லையான்னு நான் கேட்கல, என்னை எப்படி உணர வைத்துள்ளது என்பதுதான் அங்கு பிரச்சனை என்று ஆனந்தி பேசியிருக்கிறார்.