என் படத்தையா அந்தமாதிரி படம்-ன்னு சொன்ன? பச்சை சட்டை மாறனை வெச்சு செய்த ஆர்ஜே பாலாஜி

Sathyaraj Urvashi RJ Balaji Veetla Vishesham
1 வாரம் முன்
Edward

Edward

ஆர்ஜேவாக பணியாற்றி ஒருசில படங்களில் காமெடி நடிகராக நடித்து பிரபலமானவர் நடிகர் ஆர்ஜே பாலாஜி. சில ஆண்டுகளுக்கு முன் அவர் இயக்கி நடித்து வெளியான மூக்குத்தி அம்மன் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

நயன்தாரா அம்மன் வேடத்தில் நடித்த மூக்குத்தி அம்மன் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படமாக அமைந்தது.

என் படத்தையா அந்தமாதிரி படம்-ன்னு சொன்ன? பச்சை சட்டை மாறனை வெச்சு செய்த ஆர்ஜே பாலாஜி | Rj Balaji Teasing Blue Sattai Maran

வீட்ல விசேஷம்

மூக்குத்தி படத்திற்கு பிறகு இந்தியில் வெளியான பதாய் ஹோ படத்தின் ரீமேக்கில் எடுக்க முடிவெடுத்தார். அப்படி உருவாகிய படம் தான் வீட்ல விசேஷம். தமிழில் சத்யராஜ், ஊர்வசி, ஆர்ஜே பாலகி உள்ளிட்ட ஒருசில முக்கிய நட்சத்திரங்கள் நடித்து போனி கபூர் தாயாரிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ளது. இயக்குனர் சரவணன் என்பவருடன் இணைந்து இயக்கி ஆர்ஜே பாலாஜியின் வீட்ல விசேஷம் படத்தில் 50 வயதில் கர்ப்பமாகும் பெண்மணியாக ஊர்வசி நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

என் படத்தையா அந்தமாதிரி படம்-ன்னு சொன்ன? பச்சை சட்டை மாறனை வெச்சு செய்த ஆர்ஜே பாலாஜி | Rj Balaji Teasing Blue Sattai Maran

ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்

எப்போதும் போலவும் படங்களை தன் பாணியில் விமர்சிக்கும் ப்ளு சட்டை மாறனும் இப்படத்திற்கு விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டிருந்தார். கண்டபடி படத்தின் கதை நடிகர்களின் நடிப்பு பற்றி விமர்சித்து பேசியிருக்கிறார் ப்ளூ சட்டை மாறன்.

மாறனை வெறுப்பேற்றிய ஆர்ஜே பாலாஜி

இதற்கு பதிலடி கொடுக்கும் வண்ணம் ஆர்ஜே பாலாஜி ஒரு வீடியோவை வெளியிட்டு ப்ளூ சட்டை மாறனை வெறுப்பேற்றி இருக்கிறார். தயாரிப்பாளரும் மக்களும், திரையரங்க உரிமையாளர்கள் பலரும் இப்படத்திற்கு நல்லபடியான கருத்தினை கொடுத்திருக்கிறார்கள் என்று கூறினார்.

மேலும் ப்ளூ சட்டை மாறனை போன்று பேசிய ஆர்ஜே பாலாஜி, யாருக்காக படம் எடுத்தோமோ அவர்களுக்கு பிடித்திருந்தால் போதும். பச்சை சட்டை உனக்கு இந்த படம் பிடிந்திருந்தால் போதும்.

எந்த நீல சட்டைக்கும் பிடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று வெச்சு செய்துள்ளார் ஆர்ஜே பாலாஜி. இதற்கு பலர் விட்டுடு அழுதுடுவேன் என்று ப்ளூ சட்டை மாறன் கதறுவார் என்ற கருத்தினை கூறி வருகிறார்கள்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.