விஜய் உங்களுக்கு மனுஷ வாடை ஆகாதா..15 நிமிஷம் அப்படி பேசுங்க!! கரு பழனியப்பன் காட்டமாக பேச்சு..
நடிகர் விஜய், சில நாட்களுக்கு முன் ஈரோட்டில் தன்னுடைய அரசியல் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அப்போது பேசிய விஜய்யின் பேச்சை பலரும் விமரித்து வந்த நிலையில், திமுகவை சேர்ந்த கரு. பழனியப்பன் சில கேள்விகளை எழுப்பியிருக்கிறார்.

கரு பழனியப்பன்
அதில், ஈரோட்டில் பொது கூட்டம் நடந்த இடம் 80 ஏக்கர். அந்த இடத்தில் ஒரு மேடை போட்டுக்கூட ஒரு 4 நிர்வாகிகளை நிற்க வைக்க முடியாதா? பஸ்ல தனியாக நின்று பேசுகிறார். ஏன் மேடை போட்டு ஒரு 4 பேர் பக்கத்துல நிற்க முடியாதா?.
உங்களுக்கு மனுஷ வாடையே ஆகாதா? செங்கோட்டையன் பக்கத்துல நின்றால் சவமாகிவிடுவீர்களா, மேடை போட்டா பக்கத்தில் ஆள் நிற்பாங்க, நின்றால் தோள்கல் உரசும், இதுதான் மாற்றமா? வைப் பண்றீங்களா? இதுதன் பிளாஸ்ட்டா, ஒரு 15 வார்த்தையை வச்சிக்கிட்டு இவர் படுத்துற பாடு இருக்கே ஐயோ.

விஜய் நல்லது செய்யவே அரசியலுக்கு வந்திருக்கிறார். அதை நான் வரவேற்கிறேன், ஆனால் இதுவரை ஏதாவது நல்லது செய்திருக்கிறாரா? கட்சி ஆரம்பித்து இன்னும் ஒரு பொதுக்கூட்டம் கூட நடத்தவில்லை.
இதில் புஸ்ஸி ஆனந்த் வெளியே வா என சொந்த கட்சிக்காரர்களே போராட்டம் நடத்துக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் எப்படி நல்லது நடக்கும்.
பெரியார் குறித்து பேப்பர் இல்லாமல் விஜய் பேசிடட்டும், ஒரு நிமிடம் பேசினால் கூட போதும், பின்பு என சொன்னாலும் நான் செய்கிறேன், தமிழகத்தில் திராவிடத்தை விட்டுவிட்டு யாரெல்லாம் விலகுகிறார்களோ அவர்களை காலம் அடித்து உள்ளே கொண்டு வரும் என்று காரசாரமாக பேசியிருக்கிறார் கரு. பழனியப்பன்.