கமலுக்கு ஜோடி..2 நந்தி விருது!! அரசியலுக்குள் நுழைந்த பிரபல நடிகை..
நடிகை ஆமணி
தமிழில் நடிகர் முரளி நடித்த புதிய காற்று, சரத்குமாரின் இது தாண்டா சட்டம், தங்கமான தங்கச்சி, முதல் சீதனம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஆமணி. தெலுங்கு குடும்பத்தை சேர்ந்த ஆமணி, தமிழில் தான் முதலில் அறிமுகமாகினார்.

அதன்பின் தெலுங்கில் 1993ல் ஜம்ப லக்கிடி பம்பா என்ற படத்தில் நடிஹ்து பிரபலமானார். அதன்பின் மிஸ்டர் பெல்லம் என்ற படத்தில் நடித்து ஆந்திர அரசின் நந்தி விருதை பெற்றார். 12 படங்களில் தெலுங்கில் நடித்து பின் விஜயகாந்தின் ஹானஸ்ட் ராஜ், சத்யராஜின் எங்கிருந்தோ வந்தான் போன்ற படங்களில் நடித்தார்.

கமல் ஹாசன் தெலுங்கில் நடித்த சுப சங்கல்பம் படத்திலும் ஹீரோயினாக நடித்த ஆமணிக்கு இரண்டாவது நந்தி விருதை பெற்றுத்தந்தது.
பாஜக
சமீபகாலமாக குணச்சித்திர ரோலில் நடித்து வந்தவர் தற்போது அரசியலிலும் காலடி எடுத்து வைத்துள்ளார். பாஜகவில் இணைந்திருக்கும் ஆமணி, தெலுங்கானா மாநில மக்களுக்காக சேவையாற்றப்போவதாக அறிவித்து பாஜக மூத்த தலைவர் கிஷன் ரெட்டி தலைமையில் கட்சியில் ஆமணி இணைந்திருக்கிறார்.

