வேறொரு இளம்பெண்ணுடன் இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹர்! முன்னாள் மனைவி செய்த செயல்
யுஸ்வேந்திர சாஹல்
இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் யுஸ்வேந்திர சாஹல் சமீபத்தில் தன்னுடைய மனைவி தனுஸ்ரீ வர்மாவை விவாகரத்து செய்தார். இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்தியை அறிவித்த நிலையில் 60 கோடி ரூபாய் ஜீவனாம்சமாக சாஹலிடம் தனுஸ்ரீ கேட்டதாக செய்திகள் வெளியானது.
தனுஸ்ரீ தரப்பில் இதற்கு மறுப்பும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் துபாயில் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே ஐசிசி சாம்பியஸ் டிராபி 2025 போட்டி நடந்து முடிந்தது. ஏராளமாக பிரபலங்கள் ரசிகர்கள் இப்போட்டியை காண துபாஸ் மைதானத்தில் காணப்பட்டனர்.
தொகுப்பாளினி மஹ்வாஷ்
இந்நிலையில் அந்த போட்டியின் போது சாஹலுடன் ஒரு பெண் நெருக்கமாக காணப்பட்டுள்ளார். சாஹலுடன் இருந்த அந்த பெண் தொகுப்பாளினி மஹ்வாஷ் என்பவர் தானாம். இருவரும் ஒன்றாக இருந்ததை வைத்து இருவரும் டேட்டிங் செய்கிறார்களா? என்ற கேள்வியை எழுப்பி வந்தது.
சாஹலின் முன்னாள் மனைவி தனுஸ்ரீ வர்மா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பெண்கலை குறை சொல்வது எப்போதும் ஃபேஷனாக இருக்கிறது என்று கூறி பதிவிட்டுள்ளார். மேலும் இந்த வதந்திகளுக்கு மஹ்வாஷ் மறுப்பும் தெரிவித்தும் இதுபோன்ற போலி செய்திகளை பரப்ப வேண்டா என்றும் வலியுறுத்தி இருக்கிறார்.
