கோபிநாத்-ப்ரியங்கா விஜய் டிவிலியிருந்து வெளியேறுகிறார்களா? உண்மையை உடைத்த பிரபலம்
Priyanka Deshpande
Gopinath Chandran
By Tony
கோபிநாத், ப்ரியங்கா
விஜய் டிவி என்றாலே நம் நினைவிற்கு முதலில் வருவது அந்த சேனல் தொகுப்பாளர்கள் தான். சிவகார்த்திகேயன், சந்தானம் எல்லாம் விஜய் டிவியிலிருந்து சென்று தான் இன்று உச்சத்தில் உள்ளனர்.
அதை தொடர்ந்து கோபிநாத், டிடி, ரம்யா, பாவனா, ப்ரியங்கா, மாகாபா, ரக்ஷன் என பல நட்சத்திர தொகுப்பாளர்கள் விஜய் டிவியில் உள்ளனர்.
இந்நிலையில் விஜய் டிவியை வேறு ஒரு நிறுவனம் வாங்கிவிட்டது, இதனால் கோபிநாத், ப்ரியங்கா போன்றோர்கள் இந்த சேனலில் இருந்து வெளியேற உள்ளதாக பல தகவல்கள் கசிந்தது.
இதுக்குறித்து யுடியூப் பிரபலம் ஆர் ஜே ஷா மனம் திறந்து பேசியுள்ளார், இதில் ப்ரியங்கா ஹனிமூன் சென்றுள்ளார், அதனால் தான் வரவில்லை, கண்டிப்பாக அவர் விஜய் டிவியில் தான் இருப்பார்.
அதேபோல் கோபிநாத்தும் விஜய் டிவியை விட்டு விலக போவதில்லை, அது எல்லாம் வதந்தி தான், யாரும் நம்ப வேண்டாம் என கூறியுள்ளார்.