விஜய் சேதுபதியை மிக மோசமாக பேசிய RJ ஷா
விஜய் சேதுபதி மிகவும் தைரியமாக தன் கருத்தை கூறும் நடிகர். இவருக்கு என மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது.
இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது எல்லோரும் அறிந்ததே.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் விஜய் சேதுபதி, ஒரு தலைவன் எதையும் கேட்காமல், எதிரணி மீது பழி போடுவது சரியில்லை என பேசியிருப்பார்.

உடனே பலரும் இவர் முதல்வர் விஜய்யைதான் தாக்கியுள்ளார் என கடுமையாக விஜய் சேதுபதி அவர்களை எதிர்க்க, ஆர் ஜே ஷா அவர்கள், மாஸ்டர் படத்தில் எந்த ஒரு நடிகனும் செய்யாத தனது பஞ்ச் டயலாக் ஐயம் வெயிட்டிங்கை உங்களை பேச வைத்து அழகு பார்த்தார், அவரை பேச உங்களுக்கு எப்படி மனசு வந்தது, இதற்கு பெயர் என்ன தெரியுமா, நானும் ரவுடி தான் படத்தில் நீங்க ஒரு வார்த்தை சொல்வீர்களே, அது தான் என மோசமாக விஜய்யை விமர்சித்துள்ளார்.
இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் ஆர் ஜே ஷா அவர்களுக்கு வந்துகொண்டு இருக்கிறது.