நான் போட்டு இருக்க உடை கூட மனைவி வாங்கியதுதான்.. ரோஜா குறித்து பேசிய ஆர்.கே. செல்வமணி
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குநர்களில் ஒருவர் ஆர்.கே. செல்வமணி. இவர் புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன், அதிரடி படை, குற்றப்பத்திரிகை உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
சமீபத்தில் கூட கேப்டன் பிரபாகரன் திரைப்படம் 4கே தொழில்நுட்பத்தில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது.
இயக்குநர் ஆர்.கே. செல்வமணி பிரபல நடிகை ரோஜாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில், தனது மனைவி ரோஜா குறித்து இயக்குநர் ஆர்.கே. செல்வமணி பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.
"நான் சம்பாதித்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனா, அதே மரியாதையோடுதான் என் வீட்டில் இருக்கிறேன். இன்னமும் என் வார்த்தைக்கு மரியாதையை இருக்கிறது என்றால், அதற்கு காரணம் அன்பும், புரிதலும்தான். பல நேரங்களில் நான் பல பேரை பார்த்திருகிறேன். பொருளாதார ரீதியாக அவங்க கீழ இருக்கும்போது அவங்க நிலைமை எப்படி இருக்கும்னு எனக்கு தெரியும். ஆனா இன்னைக்கு வரையும் எனக்கு அந்த பிரச்சனை வந்ததே கிடையாது. வேறு கருத்து மோதல்கள் எல்லாம் வரும். அதெலாம் வேறு விஷயம். ஆனால் ஒருபோதும் எங்களுக்குள் பணத்தால் பிரச்சனை வந்தது இல்லை" என பேசியுள்ளார்.
மேலும் "நான் இப்போ வச்சி இருக்க கார், காருக்கு போடுற டீசல், நான் போட்டு இருக்க உடையில இருந்து எல்லாமே என் மனைவி வாங்கியதுதான். அதை பற்றி எனக்கு கவலை இல்லை. ஏன்னா இது நம்மளோட குடும்பம்னு ஏத்துக்கிற மனைவி இருந்தார் குடும்பத்துல எந்த பிரச்சனையும் வராது" என கூறியுள்ளார்.