விராட் கோலி விஷயத்தில் தப்பு பண்ணிட்டேன்!! உண்மையை உடைத்த ராபின் உத்தப்பா..
ராபின் உத்தப்பா
இந்திய கிரிகெட் அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா, விராட் கோலியுடனான நட்பு முறிவு குறித்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். கடந்த 2019ல் அம்பதி ராயுடு அணியில் சேர்க்கப்படாததும், யுவராஜ் சிங்கிற்கு தகுந்து பிரியாவிடை கொடுக்காதது குறித்து விராட் கோலியை விமர்சித்து பேசியிருந்தார் ராபின் உத்தப்பா.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியொன்றில், அந்தப்பேட்டி என்னை பற்றியதுதானே தவிர, விராட் கோலியை பற்றியது அல்லா. ஆனால் நான் கூறிய கருத்துக்கள் விராட் உடனான என் நட்புறவில் பாதிப்பை ஏற்படுத்தியது.
பேசியிருக்க வேண்டும்
நான் நம்பும் ஒரு கருத்தாக இருந்தாலும் அதை பொதுவெளியில் கூறியது அவரிடம் தனிப்ப்ட்ட முறையில் நான் பேசியிருக்க வேண்டும் என்பதை உணர்ந்தேன். நான் விராட் கோலியை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை.
என் நெருங்கிய நண்பரான அம்பதி ராயுடு, அவாரது தலைமையின் கீழ் எப்படி நடத்தப்பட்டார் என்பதை பற்றிதான் பேசினேன். ஒவ்வொருவருக்கும் அவரவர் தலைமைப்பண்பு இருக்கும்.
அதுகுறித்து கருத்துச் சொல்லவும் அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனாலும் எங்கள் நட்பை கருத்தில் கொண்டு நான் அவரிடம் முதலில் பேசியிருக்க வேண்டும், இது எனக்கு ஒரு பெரிய பாடம் என்று ராபின் உத்தப்பா பகிர்ந்துள்ளார்.