கமல் என்ன கிழிச்சாருன்னு!! கொந்தளித்து பேசிய நடிகர் ரோபோ சங்கர்..
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக திகழ்ந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தவர் நடிகை ரோபோ சங்கர். கேபிஒய் நிகழ்ச்சி கொடுத்த வரவேற்பை பயன்படுத்தி முன்னணி நடிகர்களுடன் இணைந்து காமெடி ரோலில் நடித்து வந்த ரோபோ சங்கர், அளவுக்கு அதிகமான மதுவால் மஞ்சள் காமாலை ஏற்பட்டு கஷ்டப்பட்டு வந்தார்.
படுஒல்லியாக மாறி தன் மனைவியால் மீண்டு வந்த ரோபோ சங்கர் பல ஆண்டுகள் கழித்து பாடிபில்டிங் போட்டியில் கலந்து கொண்டார்.
இந்நிலையில் உலக நாயகன் கமல் ஹாசனின் மிகப்பெரிய ரசிகராக இருக்கும் நடிகர் ரோபோ சங்கர் பத்திரிக்கையாளரை சந்தித்து பேசியுள்ளார். 33 வருடம் கழித்து மணிரத்னமுடம் இணையவுள்ளார் என்பதை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது. உலக நாயகன் படத்தின் அப்டேட் என்ன என்று தலைவர் அலுவலகத்தில் கால் செய்து கேட்கிறேன்.
நாயகன் படம் வெளியான போது கமலா தியேட்டரில் கொண்டாடினோம். இதுவரை யாரும் பண்ணாததை நான் செய்ததை போல் இனிமேலும் அது நடக்கும். எப்படி அனைத்தையும் சமாளிக்கிறார் உலக நாயகன். இந்தியன் 2-க்காக நானும் காத்திருக்கிறேன்.
உலக நாயகன் நம்ம ஊர்ல இருக்க வேண்டிய ஆளே கிடையாது... மீண்டும் வருகிறார் "நாயகன்"... கமலா தியேட்டரில் வேற லெவல் கொண்டாட்டம் இருக்க போகுது.
லியோ படத்தில் கமல் ஹாசன் வாய்ஸ் வருவதை பலர் கிண்டலடித்து வருகிறார்கள் என்பதை அந்த இயக்குனர் கிட்ட கேட்கணும். கமல் என்ன கிழிச்சாருனு கேட்க யாருக்கும் தகுதியே கிடையாது என்று ரோபோ சங்கர் காட்டமாக பேசியிருக்கிறார்.
உம்மை தெரியாதவர்கள் உலகில் யாருமில்லை.. உம்மை தெரியாதவர்கள் இருந்தும் தேவையில்லை என்ற போஸ்டரை தான் நான் அடிக்க போகிறேன். லோகேஷ் கனகராஜ் கமல் சாரின் தீவிர ரசிகன்.