தவமின்றி கிடைத்த வரமே.. ரோபோ சங்கர் வீட்டில் அடுத்த மகிழ்ச்சியான விசேஷம்

Robo Shankar Birthday Indraja Shankar
By Bhavya May 18, 2025 04:30 AM GMT
Report

ரோபோ ஷங்கர்

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ரோபோ ஷங்கர். இப்போது வெள்ளித்திரையில் முன்னணி காமெடியனாக கலக்கி வருகிறார்.

இவரது மகள் இந்திரஜா, விஜய்யின் பிகில் படத்தின் மூலம் நடிக்க தொடங்கி மக்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பின், தனது முறைமாமனை திருமணம் செய்து கொண்டார்.

இந்த ஜோடிக்கு அண்மையில் தான் குழந்தை பிறந்தது. திருமணத்திற்கு பின் தன் கணவர் குழந்தை என மகிழ்ச்சியாக வாழந்து வருகிறார்.

தவமின்றி கிடைத்த வரமே.. ரோபோ சங்கர் வீட்டில் அடுத்த மகிழ்ச்சியான விசேஷம் | Robo Shankar Daughter Birthday Post By Husband

மகிழ்ச்சியான விசேஷம்

இந்நிலையில், இந்திரஜா பிறந்தநாள் காரணமாக அவரது கணவர் இன்ஸ்டா தளத்தில் வாழ்த்து கூறி அழகிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், " அன்பு பொண்டாட்டிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். நீ என் வாழ்க்கையில் வந்த பின் அனைத்தும் நன்றாக சென்று கொண்டிருக்கிறது. உன்னோடு இருக்கும் ஒவ்வொரு நாளையும் காதல் கதையாக மாற்றியதற்கு நன்றி.

இன்று போல் எப்போதும் உன்னை நீ கொண்டாடு. தவமின்றி கிடைத்த வரமே. லவ் யூ பாப்பா" என்று பதிவிட்டுள்ளார். தற்போது, இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.