மறைந்த நடிகர் ரோபோ ஷங்கரின் திருமண புகைப்படம்.. இணையத்தில் வைரல்

Robo Shankar Death Indraja Shankar
By Kathick Sep 28, 2025 12:30 PM GMT
Report

நடிகர் ரோபோ ஷங்கரின் மறைவு அனைவரையும் பெரும் துயரத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது. சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை வரை நம்மை பல ஆண்டுகளாக சிரிக்க வைத்து வந்த இவருடைய மரணம் கலங்க வைத்தது.

கமல் ஹாசன், தனுஷ், சிவகார்த்திகேயன் என தமிழ் திரையுலகினர் பலரும் தங்களது இறுதி அஞ்சலியை ரோபோ ஷங்கர் உடலுக்கு செலுத்தினார்கள். சினிமா பிரபலங்கள் மட்டுமின்றி அரசியல்வாதிகள் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். கண்டிப்பாக சினிமாவில் இவருடைய இடத்தை வேறு யாராலும் பிடிக்க முடியாது என பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

மறைந்த நடிகர் ரோபோ ஷங்கரின் திருமண புகைப்படம்.. இணையத்தில் வைரல் | Robo Shankar Marriage Photo

ரோபோ ஷங்கரை போலவே அவருடைய மனைவி பிரியங்கா ரோபோ ஷங்கரும் திரையுலகில் பிரபலமான ஒருவர். கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளில் போட்டியாளராக இவர் கலந்துகொண்டுள்ளார்.

ரோபோ ஷங்கர் மற்றும் பிரியங்கா ரோபோ ஷங்கர் இருவருக்கும் இந்திரஜா எனும் மகள் இருக்கிறார். இவருக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவருக்கு ஒரு அழகிய மகள் உள்ளார். இந்நிலையில், மறைந்த நடிகர் ரோபோ ஷங்கரின் திருமண புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம் பாருங்க:

மறைந்த நடிகர் ரோபோ ஷங்கரின் திருமண புகைப்படம்.. இணையத்தில் வைரல் | Robo Shankar Marriage Photo