ரசிகையால் மேடையில் கண்கலங்கிய சீரியல் நடிகர்! அரங்கே மெய்சிளிர்த்து பார்த்த வீடியோ..

Serials
By Edward May 03, 2022 08:40 AM GMT
Report

பிரபல சன் தொலைக்காட்சியில் கடந்த 4 ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் சீரியல் ரோஜா. நடிகை பிரியங்கா நல்கரி ரோஜா கதாபாத்திரத்திலும், சுப்பு சூரியன் அர்ஜுன் கதாபாத்திரத்திலும் நடிக்க மிகப்பெரிய வெற்றியை கொடுத்து வருகிறார்கள்.

முன்னணி சீரியல் நட்சத்திரங்கள் நடிக்கும் இந்த சீரியல் 1131 எபிசோட்டினை தாண்டி சிறப்பாக ஒளிப்பரப்பாகி வருகிறது. சமீபத்தில் சன் குடும்ப விருதுகள் நடைபெற்றது. அதில் மனம் கவர்ந்த நாயகன் என்ற விருதினை அர்ஜுன் கதாபாத்திரத்திற்கு கிடைத்துள்ளது.

இதை வாங்கும் போது சிப்பு சூரியனின் தீவிர குழந்தை ரசிகை அவரது புகைப்படத்தை பரிசாக கொடுத்தார். அதன்பின் ஊனமுற்ற ரசிகை ஒருவர் மேடைக்கு வந்து மனம் உருக வைத்த சம்பவம் கண்ணீர் வரவழைத்துள்ளது.

அண்ணா என்று கூறி பாசமாடு வந்த ரசிகையை கையில் தூக்கியபடி மேடைக்கு சென்றுள்ளார் சுப்பு. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.