திருமணமாகி ஒரே ஆண்டில் கணவர் பிரிவு.. சோகத்தில் ரோஜா சீரியல் நடிகை பிரியங்கா நல்காரி..
சின்னத்திரை நட்சத்திரங்கள் சக நடிகர் நடிகைகளுடன் நட்பாக பழகி பின் காதலித்து திருமணம் செய்து வருவது அதிகரித்துள்ளது. ஆனால் ரோஜா சீரியல் மூலம் மிகப்பெரிய ஆதரவை பெற்ற நடிகை பிரியங்கா நல்காரி, தொழிலதிபர் ராகுல் வர்மாவை திடிரென திருமணம் செய்து ஷாக் கொடுத்தார். இதற்கு தான் ரோஜா சீரியலில் இருந்து விலகிவிட்டாரா என்று பலர் ஷாக்கானார்கள்.
குடும்பத்தினரை மீறி திருமணம் செய்து கொண்ட பிரியங்கா நல்காரிவை விமர்சித்தும் வந்தனர். என் குடும்பத்தினர் சம்பதம் இருந்ததாகவும் ராகுல் வீட்டில் திருமணத்தில் மகிழ்ச்சியில்லை என்றும் பிரியங்கா தெரிவித்திருந்தார். அதன்பின் மீண்டும் சீரியலில் நடித்து வரும் பிரியங்கா, திருமணமாகி ஒரு வருடமாகிய நிலையில் கணவரை பிரிந்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து தன் கணவரின் புகைப்படங்களை பிரியங்கா நல்காரி நீக்கியதாகவும், அவரைவிட்டு பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது. குறுகிய காலக்கட்டத்தில் திருமண வாழ்க்கை முடிந்துவிட்டதை நினைத்து பலர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சமீபத்தில் வெளியில்
சிரித்துக்கொண்டு, உள்ளே வலி இருக்கிறப்பதாக மறைமுகமாக
கூறும் விதமாக பையா படத்தில் பாடல் வரிகளோடு ஒரு
வீடியோவை வெளியிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் விவாகரத்து
லிஸ்ட்டில் நீங்களும் இணைந்துவிட்டீர்களா என்று ஆறுதல் கூறி
கருத்துக்கலை பகிர்ந்து வருகிறார்கள்.