விஜய் சொன்ன வார்த்தையால் நடிப்பதையே நிறுத்திய நடிகை ரோஜா
Vijay
Roja
By Yathrika
ரோஜா
90களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் படங்கள் நடித்து முன்னணி நாயகியாக வலம் வந்தவர் நடிகை ரோஜா.
எல்லா முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ள ரோஜா பட வாய்ப்புகள் இருந்த போதே அரசியலில் களமிறங்கி அதில் முழு ஈடுபாடு காட்ட ஆரம்பித்தார்.
இடையில் விஜய்யின் காவலன், சில தெலுங்கு படங்களில் அம்மா, அண்ணி போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

காவலன் பட படப்பிடிப்பில் ரோஜாவை சந்தித்த விஜய், நீங்கள் அம்மாவாக நடிக்கிறீர்களா, நீங்கள் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, உங்களை நாங்கள் இன்னும் நாயகியாகவே பார்த்து வருகிறோம் என்று கூறினார்.
அதேபோல் தெலுங்கு சினிமா நடிகரும் கூறினார், இதனால் இனி அம்மா, அண்ணி போன்ற கதாபாத்திரங்களில் நடிக்கவே கூடாது என சினிமாவில் இருந்து ஒதுங்கியதாக கூறியுள்ளார்.