5 வயது குறைவான நடிகருடன் ரொமான்ஸில் நடிகை சமந்தா? கைநழுவிய முன்னணி நடிகை!

heroine kiss cine
By Jon Jan 22, 2021 06:30 PM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் குறுகியகால கட்டத்தில் சிறு பட்ஜெட் படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை சமந்தா. இதையடுத்து முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து தென்னிந்திய சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னியாக வளம் வருகிறார். திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் நடிக்க கணவரின் சம்மதத்துடன் இன்னும் முன்னணி நடிகையாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் இனி கவர்ச்சிக்கு இடம் இல்லை என்று கூறி செய்தியும் வெளியிட்டார். இந்நிலையில் தன்னைவிட 5 வயது நடிகருடன் நடிக்க ஒப்புதலும் அளித்துள்ளாராம். ஏற்கனவே, உதயநிதி ஸ்டாலின், சிவகார்த்திகேயன் ஆகியோர் படங்களில் ஒன்றுக்கு இரண்டு முறை ஜோடி போட்டு தன்னுடைய மார்க்கெட்டை காப்பாற்றிக் கொண்டார். தற்போது அதே வேலையைத்தான் நடிகை சமந்தாவும் செய்ய உள்ளாராம்.

33 வயதான நடிகை சமந்தா, அடுத்ததாக நடிக்கவிருக்கும் படத்தில் தன்னை விட 5 வயது குறைவான 28 வயதாகிய மலையாள நடிகர் தேவ் மோகன் என்பவருக்கு ஜோடியாக அடுத்த படத்தில் நடிக்க உள்ளாராம். இப்படத்தை ருத்ரமாதேவி படத்தை இயக்கிய குணசேகர் என்பவர் சரித்திர படமாக எடுக்கவுள்ளார்.

சகுந்தலா என பெயரிடப்பட்ட இப்படத்தில் இந்த ஜோடி இணையவுள்ளார்களாம். முன்னதாக சகுந்தலா படம் அனுஷ்காவை தேடிச் சென்ற நிலையில் இனிமேல் சரித்திர கதைகளில் நடிக்க மாட்டேன் என அவர் கூறியதை தொடர்ந்து சமந்தாவிடம் வந்து சேர்ந்துள்ளதாம் அந்த கதை. சமந்தாவும் இதுவரை சரித்திர கதைகளில் நடித்ததில்லை.

தற்போது இந்த படத்தில் நடிக்க மிகவும் ஆர்வமாக இருந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார் சமந்தா. ஆனால் தன்னைவிட வயது குறைவான ஹீரோவாக இருந்தால் தான் நடிப்பேன் என இயக்குனருக்கு கட்டளை போட்டதன் அடிப்படையில் தற்போது இளம் கன்று ஒன்றை களமிறங்கியுள்ளதாம் படக்குழு.