நடிகை நயன்தாராவை ரகசியமாக நிச்சயதார்த்தம் செய்தாரா காதல் இயக்குநர்?! வைரலாகும் புகைப்படம்..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டாராகவும் திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா. ஆரம்பத்தில் சிறு கதாபாத்திரங்கள் கிடைத்தாலே போதும் என்று இருந்த நயன் தற்போது நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து கோடிகளில் சம்பளம் வாங்கி பணத்தில் புறளுகிறார்.
என்னதான் புகழ் இருந்தாலும் பல கிசுகிசுக்களில் சிக்கி சர்ச்சையை ஏற்படுத்துவார். காதல் விஷயத்தில் இருவரை காதலித்து பின் பிரிந்து தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் காதல் ஏற்பட்டு லிவ்விங் டுகெதரில் இருந்து வருகிறார். எப்போடா இவங்களுக்கு திருமணம் நடக்கும் இல்ல இவரையும் விட்டு விடுவாரா என்று பலர் கேள்வி கேட்டு வந்தனர்.
இந்நிலையில் நயன்தாராவிற்கு விக்னேஷ் சிவனுக்கும் ரகசியமாக திருமணம் நடைபெறும் என்று கூறப்பட்டது. அதேபோல் சமீபத்தில், விக்னேஷ் சிவனும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அதில் நடிகை நயன்தாரா கையில் தங்க மோதிரம் போட்டுகொண்டு காதலன் விக்னேஷின் மார்பில் சாய்ந்திருக்குமாறு போஸ் கொடுத்துள்ளார். இதனால் ஒருவேளை திருமணத்தை முடிச்சிருப்பாங்களோ என்று ரசிகர்கள் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.