பாரதி கண்ணம்மா சீரியலை விட்டு தலைதெறிக்க ஓடிய நடிகை.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி

vijay tv serial bharathi kannama roshini kannama
By Kathick Oct 22, 2021 09:50 AM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் டாப்பில் ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. அந்த தொலைக்காட்சியில் நம்பர் 1 சீரியலில் இருக்கும் இந்த தொடர் தமிழ்நாட்டு சீரியல்களிலும் சில மாதங்கள் நம்பர் 1 இடத்திலும் வந்தது. இந்த சீரியலில் கதாநாயகி கண்ணம்மா கதாபாத்திரத்தில் ரோஷினி என்பவர் நடித்து வர, அருண் என்பவர் கதாநாயகன் பாரதி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

நன்கு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த சீரியலில் இருந்து சமீபத்தில் அகிலன் வேடத்தில் நடித்தவர் வெளியேறினார். காரணம் அவருக்கு பட வாய்ப்பு வந்ததால் வெளியேறினார் என்று தகவல்கள் கூறின. மேலும் தற்போது வந்த ஒரு ஷாக்கான தகவல் என்னவென்றால் பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து முக்கிய நபர் ஒரு வெளியேறியுள்ளாராம்.

அதன்படி, பாரதி கண்ணம்மா சீரியலில் கதாநாயகியாக நடித்து அனைவரின் மனதையும் கொள்ளைகொண்டுள்ளார், இளம் நடிகை ரோஷினி சீரியலில் இருந்து வெளியேறியிருப்பதாக கூறப்படுகிறது. பட வாய்ப்புகள் வந்துள்ளதால் அவர் இந்த முடிவு எடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொறுத்திருந்து பார்ப்போம் இது உண்மையா, இல்லையா என்று..