RRR பட சிறுமி மல்லியா இது!! மாடர்ன் லுக்கில் இப்படி அசத்துறாங்க..
RRR
இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என் டி ஆர், ஆலியா பட் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் கடந்த 2022ல் வெளியான படம் தான் RRR. மிகப்பெரிய வசூலை ஈட்டிய இப்படம் நாட்டு நாட்டு பாடலுக்கான ஆஸ்கர் விருதையும் தட்டிச்சென்றது.

ஆங்கிலேய அதிகாரிகள் பழங்குடியினத்தை சேர்ந்த மல்லியை கடத்தி சென்றுவிடுவார்கள். அந்த சிறுமியை பீம் மீட்கும் முயற்சிகளே படத்தின் கதையாக இருக்கும். படத்தின் முக்கிய கருவாக மல்லி ரோல் அமைந்திருக்கும். அப்படிப்பட்ட ரோலில் நடித்தவர் தான் ட்விங்கிள் சர்மா.
டிவிங்கிள் சர்மா
நடனத்தில் ஆர்வம் கொண்டு பின் தொலைக்காட்சி நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று தன் திறமையை வெளிப்படுத்திய டிவிங்கிள் சர்மாவுக்கு, டான்ஸ் இந்தியா டான்ஸ் நிகழ்ச்சி பெரிய அடையாளம் கொடுத்தது. அதன்பின் விளம்பரங்களில் நடித்த ட்விங்கிள், RRR பட வாய்ப்பு பெற்று மல்லி ரோலில் நடித்திருக்கிறார்.

படத்தில் எளிமையான தோற்றத்தில் காணப்பட்ட ட்விங்கிள் சர்மா, இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து மாடர்ன் லுக்கில் உலா வருகிறார். சமீபத்தில் டிவிங்கிள் சர்மா எடுத்த புகைப்படங்கள், ரீசெண்ட் ரீல்ஸ் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெற்று வருகிறது.


