ரசிகர்களை வெறுப்பேற்ற பீஸ்ட் படத்திற்கு பதில் RRR படத்தை போட்ட திரையரங்கம்.. கதறிய விஜய் ரசிகர்கள்

vijay theatre rrr beast
By Kathick Apr 15, 2022 12:40 PM GMT
Report

விஜய் நடிப்பில் உருவாகியிருந்த பீஸ்ட் திரைப்படம் இன்று உலகளவில் பிரம்மாண்டமான முறையில் வெளியாகியுள்ளது. விஜய்யின் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம், அவர்களின் முழு எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்ய தவறிவிட்டது.

இந்நிலையில், பிரபல திரையரங்கத்தில் பீஸ்ட் படம் திரையிடப்பட்டு, இடைவேளை விடப்பட்டுள்ளது. இடைவேளைக்கு பின் படத்தை காண ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் விதமாக RRR படத்தை போட்டுள்ளனர்.

இதனை பார்த்த விஜய்யின் ரசிகர்கள் கடுப்பில் கத்தியுள்ளார்கள். அப்போது, கூட அதனை கண்டுக்காமல், RRR படத்தை ஓட்டியுள்ளனர். விஜய் ரசிகர்களை கடுப்பேத்தும் விதத்தில் இருக்கும் இந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

வீடியோ இதோ..