இத்தனை கோடியில் புரளும் தயாரிப்பாளர்! நடிகர்களுக்கு சம்பளமே இத்தனை கோடியாமே?

ntr ramcharan rrr rrrmovie ssrajamouli aliabhat
By Edward Mar 24, 2022 03:15 PM GMT
Report

பிரம்மாண்ட இயக்குனர் என்ற பேர் எடுத்து பாகுபலி முதல், இரண்டு பாகங்களை வெளியிட்டு ஆயிரம் கோடியில் வசூலை கொடுத்தவர் எஸ் எஸ் ராஜமெளலி. இந்த படத்திற்கு பிறகு ராம் சரண், ஜூனியர் NTR, அஜய் தேவ்கன், ஆலியா பட் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களை வைத்து எடுத்துள்ள படம் RRR.

500 கோடி பட்ஜெட் செலவில் உருவாகியுள்ள இப்படம் நாளை மார்ச் 25ல் உலகம் முழுவதும் தியேட்டரில் வெளியாகவுள்ளது. மிகப்பெரியளவில் எதிர்ப்பார்த்துள்ள இப்படத்தின் வ்சூல் பல கோடியை அள்ளும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் படம் இதுவரை சேட்லைட், டிஜிட்டல், ஆடியோ போன்றவற்றின் ரைட்ஸ் மட்டும் 325 கோடிக்கு விற்பனை செய்துள்ளாராம். மொத்தத்தில் 785 கோடிக்கும் மேல் வியாபாரம் செய்யப்பட்டுள்ளதாம். இப்படத்தின் அசல் போக தயாரிப்பாளருக்கு தற்போது வரை 285 கோடி லாபமாக கிடைத்துள்ளதாம்.

மேலும் படத்தில் நட்சத்திரங்கள் வாங்கிய சம்பள விவரமும் வெளியாகியுள்ளது. நடிகர் ராம் சரண், ஜூனியர் NTR சம்பளம் தலா 75 கோடி அளவில் பெற்றுள்ளார்களாம்.

மேலும் அஜய் தேவ்கன் 35 கோடியும், ஆலியா பட் 8 கோடியும் வாங்கியுள்ளாராம். இப்படத்தின் மற்ற வேலைகளை பார்த்தவர்களுக்கு 20 கோடி உட்பட 208 கோடிகள் சம்பளமாகவே சென்றுள்ளது.

மேலும் இயக்குனர் ராஜமெளலியின் சம்பளமாக எதுவும் வாங்கவில்லை என்றும் படத்தின் வசூலை பொருத்து ஒருசில பங்கினை பெறவுள்ளாராம்.