தமிழ் சினிமாவின் அடுத்த கனவுகன்னி இவர் தானாம், குவியும் படங்கள்
Rukmini Vasanth
By Tony
தமிழ் சினிமாவில் எப்போதும் ஒவ்வொரு காலகட்டத்திற்கு ஒரு ஹீரோயின் ஜொலிப்பார்கள், பிறகு மார்க்கெட் போனதும் திருமணம் செய்துக்கொண்டோ அல்லது சீரியலுக்கு வந்தோ செட்டில் ஆவார்கள்.
ஆனால், சிம்ரன், ஜோதிகா, திரிஷா, நயன்தாரா போன்ற ஒரு சிலர் மட்டுமே பல வருடங்களாக ஜொலித்து வருபவர்கள்.
அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவின் கனவு கன்னியாக வரவிருப்பவர் கன்னட சினிமாவை சார்ந்த ருக்மிணி வசந்த் தான்.
தமிழில் ஏற்கனவே விஜய் சேதுபதி நடித்த ஏஸ் படத்தில் அறிமுக ஆன இவர், அடுத்து சிவகார்த்திகேயன் ஜோடியாக மதராஸி, மணிரத்னம் அடுத்த படம், அதோடு தனுஷ், விக்ரமுக்கு ஜோடியாகவும் சில படங்களில் இவர் பெயர் அடிப்பட அடுத்த கனவு கன்னி இவர் தான் என கூறி வருகின்றனர்.