ஆள்மாறாட்டம் செய்து முறைகேடு.. எச்சரித்த நடிகை ருக்மிணி வசந்த்..

Actress Rukmini Vasanth
By Kathick Nov 09, 2025 04:30 AM GMT
Report

தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ருக்மிணி வசந்த். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த காந்தாரா படம் உலகளவில் ரூ. 855 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

இந்நிலையில், தன்னை போலவே ஆள்மாறாட்டம் செய்து முறைகேடு நடப்பதாக ருக்மணி வசந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எச்சரித்துள்ளார்.

ஆள்மாறாட்டம் செய்து முறைகேடு.. எச்சரித்த நடிகை ருக்மிணி வசந்த்.. | Rukmini Vasanth Warns Fans From Cyber Fraud

அவர் வெளியிட்டுள்ள பதிவில், " முக்கியமான எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு செய்தி. 9445893273 என்கிற எண்னை பயன்படுத்தும் ஒருவர் என்னைப்போலவே ஆள்மாறாட்டம் செய்து பல்வேறு நபர்களை தொடர்கொள்வது எனது கவனத்திற்கு வந்துள்ளது. இந்த எண் என்னுடையது அல்ல என்பதையும், அதிலிருந்து வரும் எந்த செய்திகளும் அல்லது அழைப்புகளும் முற்றிலும் போலியானவை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். தயவுசெய்து இதுபோன்ற செய்திகளுக்கு பதிலளிக்கவோ அல்லது ஈடுபடவோ வேண்டாம்".

"இந்த ஆள்மாறாட்டம் சைபர் குற்றத்தின் கீழ் வருகிறது. மேலும் இதுபோன்ற மோசடி மற்றும் தவறான செயல்களில் ஈடுபடுவார்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எந்தவொரு தெரிவுபடுத்தலுக்கும் அல்லது சரிபார்ப்புக்கும் என்னையோ அல்லது எனது குழுவையோ நீங்கள் நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.உங்கள் புரிதலுக்கும் ஒத்துழைப்புக்கும் நன்றி. ஆன்லைனில் விழிப்புடனும் பாதுகாப்பாகவும் இருங்கள்" என கூறியுள்ளார்.