ப்ரீ பிசினஸில் வசூலை அள்ளிய ஜனநாயகன்.. மாஸ் காட்டிய தளபதி விஜய்

Vijay JanaNayagan
By Kathick Nov 09, 2025 02:30 AM GMT
Report

தளபதி விஜய்யின் கடைசி படம் ஜனநாயகன். அரசியலில் களமிறங்கியுள்ள காரணத்தினால் சினிமாவில் இருந்து விலகியுள்ளார் விஜய். இதனால் ஜனநாயகன் படத்தை திரையரங்கில் கொண்டாட ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

நேற்று மாலை இப்படத்தில் இருந்து முதல் பாடல் தளபதி கச்சேரி வெளிவந்தது. இதனை Youtube பல மில்லியன் ரசிகர்கள் பார்த்துள்ளனர். மேலும் இந்த பாடலை திரையரங்கில் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

ப்ரீ பிசினஸில் வசூலை அள்ளிய ஜனநாயகன்.. மாஸ் காட்டிய தளபதி விஜய் | Jana Nayagan Movie Pre Business

இந்த நிலையில், ஜனநாயகன் படத்தின் ப்ரீ பிசினஸ் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ஜனநாயகன் படத்தை ரூ. 110 கோடிக்கு OTT நிறுவனம் வாங்கியுள்ளது. தமிழ்நாடு மற்றும் கேரளா திரையரங்க உரிமை ரூ. 115 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஆடியோ உரிமை ரூ. 35 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளது. இதன்மூலம் ரிலீஸுக்கு முன் நடந்த ப்ரீ பிசினஸில் ரூ. 260 கோடி வசூல் செய்துள்ளது.